ஓடிஜி : நவீன சமையலறையின் பெஸ்டி!| Dinamalar

ஓடிஜி : நவீன சமையலறையின் பெஸ்டி!

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | |
கடைகளில் கிடைக்கும், கேக், பிட்சா, சிக்கன் கிரில் போன்றவற்றை நீங்கள் வீட்டில் அதே போல் செய்ய வேண்டும் என்றால் ஓடிஜி எனப்படும் ஓவன் டோஸ்டர் கிரில் தான் பெஸ்ட் சாய்ஸ். இது நவீன சமையலறைக்கு மிகவும் உபயோகமுள்ள ஒரு சமையல் இயந்திரம். காபியை சூடு பண்ணுவது முதல் பிஸ்கட், நான், தந்தூரி என பல ஐட்டம்களை அலேக்காக சமைக்க முடியும். ஓடிஜி என்றால் என்ன?ஓவன், டோஸ்டர், கிரில் (OTG) என்பது
LifeStyle, Householdtips, OTG, Kitchen, tips, லைப்ஸ்டைல், வீட்டு பராமரிப்பு, ஓடிஜி, கிரில், டோஸ்டர்.

கடைகளில் கிடைக்கும், கேக், பிட்சா, சிக்கன் கிரில் போன்றவற்றை நீங்கள் வீட்டில் அதே போல் செய்ய வேண்டும் என்றால் ஓடிஜி எனப்படும் ஓவன் டோஸ்டர் கிரில் தான் பெஸ்ட் சாய்ஸ். இது நவீன சமையலறைக்கு மிகவும் உபயோகமுள்ள ஒரு சமையல் இயந்திரம். காபியை சூடு பண்ணுவது முதல் பிஸ்கட், நான், தந்தூரி என பல ஐட்டம்களை அலேக்காக சமைக்க முடியும்.

ஓடிஜி என்றால் என்ன?

ஓவன், டோஸ்டர், கிரில் (OTG) என்பது வெளிநாடுகளில் காணப்படும் ஓவன் அடுப்பின் சிறிய வடிவமாகும். இதில் உணவை சமைப்பதற்கு சூடான காயில் (coil) பயன்படுத்தப்படுகிறது. ஓடிஜி மூலம் சமைக்கும் போது, அதன் வெப்பம் காயில்கள் மூலம் கதிர்வீச்சாக மாறி உணவை சமைக்கிறது. மேலும் ஓடிஜிகளில் இருக்கும் தெர்மோஸ்டாட் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அதனால் உணவு சம சீராக வேகும்.

ஓடிஜி வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டியது குறித்து இப்போது பார்க்கலாம்.


latest tamil newsஓடிஜி இயந்திரம் பேக்கிங், டோஸ்ட்டிங் மற்றும் கிரில்லிங் செய்வதற்கு மிகவும் ஏற்றது. கேக்குகள், குக்கீஸ், இறைச்சி கிரில், டோஸ்ட், வீட் ரொட்டி என பல்வேறு உணவுகளை செய்வதற்கு ஏற்ற அற்புதமான சமையலறை சாதனம். மேலும் ஓடிஜியின் சிறப்பு அம்சம் என்ன வென்றால் அதிக நேரம் சமைத்தாலும் குறைந்த அளவில் மின்சாரம் தேவைப்படும்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஓடிஜி ஒரு அத்தியாவசிய சமையலறை சாதனமாகும். ஏனெனில் சிறிய முதல் பெரிய குடும்பங்கள் வரை அனைவருக்கும் உதவும் வகையில் உள்ளது. குறிப்பாக இது மைக்ரோவேவ் ஓவன்கள் அல்லது வழக்கமான அடுப்புகளை விட உபயோகிப்பது மிகவும் எளிதானது.


latest tamil newsமைக்ரோவேவ் போல் அல்லாமல், ஓடிஜியில் உலோக (Metal) பாத்திரங்களை பயன்படுத்தி கிரில்லிங், பேக்கிங் மற்றும் உணவை மீண்டும் சூடுபடுத்த முடியும். இந்த சாதனத்தின் 3-இன்-1 அம்சத்திற்காகவே இவை அனைவரையும் கவரும்.

என்ன சமைக்கலாம்.

பேக்கிங், டோஸ்டிங் மற்றும் கிரில்லிங் செய்வதற்கு ஓடிஜி சிறந்தது. உதாரணமாக, நீங்கள் கேக்குகள், கிரில் சிக்கன் மற்றும் நான் ரொட்டி, பன்னீர் டிக்கா, என பல விதமான உணவுகளை எளிதாக சமைக்கலாம். மேலும் கடைகளில் வாங்கும் பிட்சா, பப்ஸ் போன்றவற்றை மீண்டும் சூடு படுத்தவும் இது உதவும்,

ஓடிஜி கொள்ளவு:


latest tamil newsசமையல் பொருட்கள் கிடைக்கும் மின் சாதன கடைகளில் நீங்கள் ஓடிஜியை வாங்கலாம். இதன் கொள்ளவு சுமார் 10 லிட்டர் அளவில் ஆரம்பமாகிறது. அதிகபட்ச அளவாக 60 லிட்டர் வரை கிடைக்கிறது. உங்கள் தேவை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருத்து ஓடிஜியை தேர்வு செய்யலாம்.

விலை நிலவரம்:

மினிமம் ஆப்ஷன் உள்ள ஓடிஜியின் விலை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது. கொள்ளவு மற்றும் சிறப்பு அம்சங்களை பொருத்து இதன் விலையும் அதிகரிக்கும். எல்லா பிரபல பிராண்ட்களிலும் இவை பலவிதமான சிறப்பு அம்சத்துடன் கிடைக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X