இந்திய கலாசாரத்தை உலக அரங்கில் பறைசாற்றும் பிரதமரின் வண்ணவண்ண டர்பன்கள்..!

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
ஆண்டுதோறும் பிரதமர் மோடி விழாக்கள் பலவற்றில் கலந்துகொள்கிறார். பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் விழாக்களில் பங்கேற்கும் அவர், பலவித டர்பன்களை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் அணிந்த இந்தியக் கொடி நிறத்திலான டர்பன் இணையத்தில் வைரலாகியது. இதேபோல காவி, சிவப்பு, பச்சை, பிங்க், மஞ்சள் என பல நிற
ராஜஸ்தானி டர்பன், பிரதமர் மோடி டர்பன், turban, modi turban, rajasthani turban

ஆண்டுதோறும் பிரதமர் மோடி விழாக்கள் பலவற்றில் கலந்துகொள்கிறார். பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் விழாக்களில் பங்கேற்கும் அவர், பலவித டர்பன்களை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


latest tamil newsசமீபத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் அணிந்த இந்தியக் கொடி நிறத்திலான டர்பன் இணையத்தில் வைரலாகியது. இதேபோல காவி, சிவப்பு, பச்சை, பிங்க், மஞ்சள் என பல நிற டர்பன்களை பிரதமர் மோடி பல்வேறு விழாக்களில் அணிந்துள்ளார்.


பிரதமர் அணியும் இதுபோன்ற விதவிதமான டர்பன்கள் அந்தந்த மாநிலங்களின் கலாசாரத்தை உலக நாடுகளிடையே பிரதிபலிப்பதால் அவ்வப்போது இவை சமூக வலைதளங்களில் டிரெண்டாவதுண்டு.


latest tamil newsசில ஆண்டுகளுக்கு முன்னர் ஜாம்நகர் அரச குடும்பம் பரிசளித்த 'பக்டி' டர்பனை பிரதமர் அணிந்தார். இதை நேர்த்தியாக வடிவமைத்து தலையில் கட்டுவதற்கு தனித் திறமை வேண்டும். பிரதமர் மோடி அணிவதற்காக சில டர்பன்கள் பிரத்யேகமாக வடிவமமைக்கப்படுவதுண்டு. நீண்ட வால் கொண்ட குஜராத்தி டர்பன் மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்ட ராஜஸ்தானி டர்பன் உள்ளிட்டவை பிரதமர் அணிந்த டர்பன்களில் அதிக வரவேற்பு பெற்றவை.


latest tamil newsகிட்டத்தட்ட எட்டு அடி நீளம் கொண்ட டர்பன் துணியில் மெல்லிய அலங்கார வேலைபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த நீண்ட துணியை கச்சிதமாக தலையில் கட்டிமுடிக்க சில நிமிடங்களாவது ஆகும். இந்திய மாநிலங்கள் பலவற்றில் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் இந்த டர்பன்களை ஆண்கள் அணிவது வழக்கம்.


latest tamil newsஒவ்வொரு ரக டர்பனுக்கும் பிரத்யேக நிறம் மட்டுமல்லாமல் கட்டும் விதமும் மாறுபடும். இதனை நாட்டின் பிரதமர் கட்டும்போது உலக நாட்டுத் தலைவர்கள் பலர் இந்தியாவின் பல்வேறு கலாசாரங்களை அறிந்துகொள்வர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-202220:10:48 IST Report Abuse
அப்புசாமி .....
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
05-செப்-202219:25:00 IST Report Abuse
Priyan Vadanad நமது பிரதமருக்கு பிடித்த நிறம் நாட்டு கொடியில் இருக்கும் காவிதான். அதுதான் மேலே இருக்கிறது. அதற்கு கீழ்தான் வெள்ளையும் பச்சையும் என்பதை மறந்து போகவேண்டாம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
05-செப்-202219:22:51 IST Report Abuse
John Miller ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X