காரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை சிக்கன் குழம்பு

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | |
Advertisement
சுவையில் புளிப்புத்தன்மையும், அதிக சத்தும் நிறைந்த புளிச்சக்கீரை உடல் வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சக்கீரையை காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சக்கீரை என பல பெயரில் அழைப்பர். இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, , போலிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் உடல் வலிமை குறைவாக காணப்படும்
Lifestyle, Food, Pulichakeerai, Gonkura chicken, லைப்ஸ்டைல், உணவு, புளிச்சக்கீரை, கோங்குரா சிக்கன், ரெசிபி

சுவையில் புளிப்புத்தன்மையும், அதிக சத்தும் நிறைந்த புளிச்சக்கீரை உடல் வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சக்கீரையை காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சக்கீரை என பல பெயரில் அழைப்பர். இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, , போலிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.

இதனால் உடல் வலிமை குறைவாக காணப்படும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல் சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்னை உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மேலும் உடல் வெப்பத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்சக்கீரை உதவும்.


latest tamil news



ஆந்திராவில் இந்தக்கீரை மிகவும் பிரபலமானது. கோங்குரா என்று அழைக்கப்படும் இந்த கீரையில் செய்யப்படும் சுவைமிகுந்த கோங்குரா சிக்கன் நா ஊறச்செய்யும். அதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:



புளிச்சக்கீரை -1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சிக்கன் - 250 கிராம் (வேக வைத்தது)
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்


செய்முறை :



latest tamil news



முதலில் புளிச்சக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோல் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைத்து சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த வேண்டும். அதில் கொஞ்சம் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

பின் அதில் நறுக்கிய புளிச்சக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கனை சேர்த்து மிளகாய், கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேகவைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும். ருசியான கோங்குரா சிக்கன் தயார். சாதம், சப்பாத்திக்கு அசத்தலாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X