பாலாற்றில் தண்ணீர் செல்வதால் தடுப்பணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன்| Dinamalar

பாலாற்றில் தண்ணீர் செல்வதால் தடுப்பணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன்

Added : செப் 05, 2022 | கருத்துகள் (11) | |
வேலுார்: பாலாற்றில் தண்ணீர் செல்வதால் தடுப்பணை கட்ட முடியாது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று(செப்.,05) நடந்தது. 1,968 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்க்கு அளித்த பேட்டி: ஆந்திரா மாநில அரசு கொசஸ்தலை
அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை , நீர்வளத்துறை

வேலுார்: பாலாற்றில் தண்ணீர் செல்வதால் தடுப்பணை கட்ட முடியாது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று(செப்.,05) நடந்தது. 1,968 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.


பின்னர் அவர் செய்தியாளர்க்கு அளித்த பேட்டி: ஆந்திரா மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். மேட்டூர் உபரிநீர் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. வாய்ப்பிருந்தால் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.


தமிழகத்தில் புதிய அணைக்கள் கட்ட வாய்ப்பில்லை. மேட்டூர் பேபி அணைக்கட்டில் மரங்கள் அப்புறப்படுத்துவது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி பேச முடியாது. பாலாற்றில் தண்ணீர் செல்வதால் தற்போது தடுப்பணை கட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X