6 வயது சிறுமி பலாத்காரம் விவசாயிக்கு சாகும் வரை ஆயுள் சிறை;

Added : செப் 05, 2022 | |
Advertisement
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, விவசாயிக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலுார் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெரம்பலுார் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்,48, விவசாயியான இவர், கடந்த 2020ம் ஆண்டு நவ., 30ம் தேதி ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை தூக்கி சென்று சோளக்காட்டில் வைத்து பாலியல்

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, விவசாயிக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலுார் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரம்பலுார் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்,48, விவசாயியான இவர், கடந்த 2020ம் ஆண்டு நவ., 30ம் தேதி ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை தூக்கி சென்று சோளக்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து விபரமறிந்த சிறுமியின் தாய் மருவத்துார் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில், மருவத்துார் போலீசார் சரவணனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமினில் வெளியில் வந்தார். இந்த வழக்கு பெரம்பலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துகுமரவேல் இன்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு இயற்கையாக சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு.6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, பெரம்பலுார் போலீசார் சரவணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X