வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெல்காவி: கர்நாடகா, மடிவலேஷ்வர் மடத்தின் தலைமை மடாதிபதி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குரு மடிவலேஷ்வர் மடம் உள்ளது. இதன் தலைமை மடாதிபதியாக பசவ சித்தலிங்க சுவாமி உள்ளார்.
இன்று(செப்.05) இந்த மடத்தினைச் சேர்ந்த இரு பெண் உதவியாளர் அவர் தங்கியிருந்த குடிலில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
![]()
|
தகவலறிந்த போலீசார் மடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பசவசித்தலிங்க சுவாமி தற்கொலை செய்து கெண்டதாகவும், அவரது உடல் அருகே கடிதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement