சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: அரசு முடிவு எடுத்து, 'ஆன்லைன் ரம்மி'யை தடை செய்து விட்டால், தடை செய்யப்பட்ட அதற்கு, நான் எப்படி விளம்பரத்தில் நடிப்பேன்? குடிப்பழக்கம், குடியை கெடுக்கும். ஆனால், குடிக்காமல் இருக்கின்றனரா? எனவே, உலகத்தில் எல்லாமே இருக்கிறது; மக்கள் அதை பார்த்து கெட்டுப் போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.டவுட்

'டவுட்' தனபாலு

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: அரசு முடிவு எடுத்து, 'ஆன்லைன் ரம்மி'யை தடை செய்து விட்டால், தடை செய்யப்பட்ட அதற்கு, நான் எப்படி விளம்பரத்தில் நடிப்பேன்? குடிப்பழக்கம், குடியை கெடுக்கும். ஆனால், குடிக்காமல் இருக்கின்றனரா? எனவே, உலகத்தில் எல்லாமே இருக்கிறது; மக்கள் அதை பார்த்து கெட்டுப் போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

டவுட் தனபாலு: 'சினிமாவில வாய்ப்பு குறைஞ்சு போயிடுச்சு... கட்சியும் லெட்டர் பேடுல தான் செயல்படுது... நேரம் போகாமலும், வருமானத்துக்காகவுமே, இந்த மாதிரி விளம்பரங்கள்ல நடிக்கிறேன்'னு வெளிப்படையா சொல்றதை விட்டுட்டு, இப்படி வியாக்கியானம் பேசணுமா என்பது தான் எங்க, 'டவுட்!'

மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: மக்களால் தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பவர்கள் தான், நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பிதற்றி வருகின்றனர். காங்., ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பற்றி, இவர்கள் எப்போதும் விமர்சிக்க மாட்டார்கள்.

டவுட் தனபாலு: நீங்க சொல்றது ரொம்ப சரி... அவசர நிலை காலத்துல, அடி மேல அடி வாங்கி, ஒரு வருஷத்துக்கும் மேலா சிறையில அடைபட்டு கிடந்தவங்களே, காங்கிரசுடன் இப்ப கொஞ்சி, குலாவிட்டு இருக்காங்களே... அவங்க எல்லாம், கருத்து சுதந்திரம் பற்றி பேசவே தகுதியற்றவர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களில், 25 பேருக்கு, மாநில தலைமை வழியாகவும், மாவட்டத்தில் ஒருவருக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் வழியாகவும், அமைச்சர் பெயரை சொல்லி, சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விருது வாங்கிய சிலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதை, பள்ளிக்கல்வித் துறை விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

டவுட் தனபாலு: பசங்களுக்கு நல்லொழுக்கம் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களே இப்படி இருந்தா எப்படி...? இவங்களிடம் படிக்கிற மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமா இருக்குமா என்பது, 'டவுட்'தான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-செப்-202206:24:54 IST Report Abuse
D.Ambujavalli 'நான் பாட்டுக்கு எந்த விளம்பரமானாலும் காசுக்காக நடிப்பேன். அஹோடு சரி . ரம்மி ஆடி கடன் பட்டு, நீங்களோ குடும்பமோ தற்கொலை செய்துகொண்டால் ரிஸ்க் உங்களுடையதுதான். எனக்கு வேண்டியது காசு' நல்ல பாலிசி காசை வீசி, சிபார்சுடன் வாங்கும் 'நல்லாசிரியர்' கூட்டம், பிள்ளைகளுக்கு எவ்வளவு நல்வழி காட்டும் என்பதில் டவுட் வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X