சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 05, 2022 | |
Advertisement
மக்கள் நல்வாழ்வு துறை அமைச் சர் சுப்பிரமணியன் பேட்டி: கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனைகளில் தான் சுகப்பிரசவம் வாயிலாக, அதிகளவு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தனியார் மருத்துவமனை களில் பெரும்பாலும், 'சிசேரியன்' கள் தான் நடந்துள்ளன. அவர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தமிழகத்தில், 'சிசேரியன்' இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது தான், அரசின் தொடர்


பேச்சு, பேட்டி, அறிக்கை

மக்கள் நல்வாழ்வு துறை அமைச் சர் சுப்பிரமணியன் பேட்டி: கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனைகளில் தான் சுகப்பிரசவம் வாயிலாக, அதிகளவு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தனியார் மருத்துவமனை களில் பெரும்பாலும், 'சிசேரியன்' கள் தான் நடந்துள்ளன. அவர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தமிழகத்தில், 'சிசேரியன்' இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது தான், அரசின் தொடர் விருப்பம். சுகப்பிரசவம் வேண்டுமா... சிசேரியன் வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிரசவங்கள் நடக்காமல் தடுக்க, அமைச்சர் என்ற முறையில் அறிவுறுத்தினா மட்டும் போதுமா?

ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேச்சு: தமிழகத்தில் வாரிசு அரசியலை, பா.ஜ., வின் அண்ணாமலை எழுச்சியுடன் அகற்றுவார். தமிழகத்தில் மீண்டும் பழனி சாமி ஆட்சி வரவேண்டும். ராகுல் கன்னியாகுமரியில் துவங்கும் பாத யாத்திரையின் போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 'கோ பேக் ராகுல்' என்ற இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நடத்தும்.யாரை எதிர்த்தால், பிரபலமாவோம் என்பதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க!

பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேச்சு: ஒரு கட்டடம் சிறப்பாக வர, அனைத்து மதத்திலும் பிரார்த்தனை செய்வது இயல்பு. ஹிந்து மதத்தில் மட்டுமே, ஹோமம் வளர்ப்பர். அதையும், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் தடுக்கிறார். ஹிந்துக்களின் நம்பிக்கையை விமர்சிப்பது, மற்ற மதத்தினரை ஹிந்துக்களுக்கு எதிராக துாண்டி விடுவது தான், தி.மு.க.,வினர் வேலை. அக்கட்சிக்கு ஹிந்துக்கள் ஓட்டளிக்கவில்லையா?ஹிந்துக்கள் ஓட்டுகளை வாங்கித் தானே, ஆட்சியில் அமர்ந்திருக் காங்க... தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் வேலையை தான், தி.மு.க.,வினர் செஞ்சிட்டு இருக்காங்க!

அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் ப.குமார் பேட்டி: ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற பின்தங்கிய மாநிலங்களே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளன. எனவே, அனைத்து துறையிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ, அரசுப் பணியாளர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம் என்பதை முதல்வர் கவனத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய அறிவிப்பை வெளியிடுவார் என, நம்புகிறோம். நம்புங்க... நல்லா நம்புங்க... நம்பிக்கை தானே வாழ்க்கை!


தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'கொரோனாவை விட கொடூரமான பா.ஜ.,வை, வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்' என, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி கூறியுள்ளார். தடுப்பூசியை கொண்டு கொரோனாவையே விரட்டியடித்த பா.ஜ.,வை, ஊழல் வைரஸ்களால் விரட்டியடிக்க முடியாது.சரியான பதிலடி... வாயை கொடுத்து உதயநிதி வாங்கி கட்டிக்கணுமா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X