'ரிட்டர்ன் டிக்கெட்' வசதிமெட்ரோவில் எப்போது?

Added : செப் 05, 2022 | |
Advertisement
பயணியர் எதிர்பார்ப்புசென்னை சென்னையில் இரண்டு வழித்தடங்களில் தற்போது 54.65 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 1.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். காகித டிக்கெட், பயண அட்டை, க்யூ.ஆர்., தொழில்நுட்ப வசதி வாயிலாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது. வழக்கமாக மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், பயண அட்டை அல்லது




பயணியர் எதிர்பார்ப்பு



சென்னை சென்னையில் இரண்டு வழித்தடங்களில் தற்போது 54.65 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 1.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். காகித டிக்கெட், பயண அட்டை, க்யூ.ஆர்., தொழில்நுட்ப வசதி வாயிலாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது. வழக்கமாக மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், பயண அட்டை அல்லது க்யூ.ஆர்., தொழில்நுட்பம் வாயிலாக டிக்கெட் எடுத்து பயணிக்கின்றனர். இருப்பினும், 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் காகித டிக்கெட் எடுத்து பயணம் செய்கின்றனர். இதனால், அலுவலக நேரங்களில் டிக்கெட் கவுன்டர்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. புறநகர் மின்சார ரயில்களில் இருப்பது போல், மெட்ரோ ரயிலிலும் ரிட்டன் டிக்கெட் வசதி கொண்டு வரப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்து சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் இந்த வசதி வராததால், பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.இது குறித்து மெட்ரோ ரயில் பயணியர் கூறியதாவது: சாலை போக்குவரத்து வசதியை காட்டிலும், மெட்ரோ ரயில் வசதியாக இருக்கிறது. கட்டணமும் ஓரளவுக்கு நியாயமாக இருக்கிறது. மெட்ரோ ரயில்களில் பயணியர் அதிகளவில் பயணம் செய்ய துவங்கி விட்டனர். புதிதாக வருவோரில் பெரும்பாலானோர், கவுன்டர்களில் காகித டிக்கெட் எடுத்து பயணம் செய்கின்றனர். இவர்கள் திரும்ப பயணிக்க வேண்டுமானால், மீண்டும் டிக்கெட் எடுக்க வேண்டும். பயண அட்டை ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைக்கு ஒன்று அல்லது இரண்டு கவுன்டர்களே இயங்குகின்றன. இதனால், அலுவலக நேரங்களில் பயணியர் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, மின்சார ரயிலில் இருப்பது போல், ரிட்டன் டிக்கெட் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் கொண்டு வர வேண்டும். இந்த வசதி வந்தால், பயணியர் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X