சி.எம்.டி.ஏ., விரிவாக்கத்தில் மாற்றம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை :சென்னை பெருநகர் பகுதியில், எல்லை விரிவாக்கத்துக்கான பரப்பளவு, 5,800 சதுர கி.மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர் பகுதி தற்போது, 1,189 சதுர கி.மீட்டராக உள்ளது. இது, சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சில பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.அந்த பகுதிகளுக்கு அப்பால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்,

சென்னை :சென்னை பெருநகர் பகுதியில், எல்லை விரிவாக்கத்துக்கான பரப்பளவு, 5,800 சதுர கி.மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர் பகுதி தற்போது, 1,189 சதுர கி.மீட்டராக உள்ளது. இது, சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சில பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.அந்த பகுதிகளுக்கு அப்பால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பெரும்பாலான பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதிகளை சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, சி.எம்.டி.ஏ., எல்லை பரப்பை விரிவாக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. இதை உணர்ந்து, 2018ல் சி.எம்.டி.ஏ., விரிவாக்கத்துக்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.இதன்படி, சி.எம்.டி.ஏ., எல்லை பரப்பை, 8,878 சதுர கி.மீ.,ஆக விரிவாக்க வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து, பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளை சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் சேர்ப்பதில், நடைமுறை சிக்கல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, எல்லை விரிவாக்கத்துக்கான பரப்பளவை மாற்ற, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, அரக்கோணம் மாவட்டத்தின் பல பகுதிகளுடன், 5,800 சதுர கி.மீ.,ஆக மாற்றி அமைத்து, புதிய வரைவு திட்டத்தை சி.எம்.டி.ஏ., உருவாக்கியது.இந்த வரைவு அறிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X