வாலிபருக்கு சரமாரியாக வெட்டுநான்கு பேர் கும்பல் கைது

Added : செப் 05, 2022 | |
Advertisement
தாம்பரம் :மேற்கு தாம்பரத்தில், வீட்டில் இருந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நான்கு பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.-மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கோகுல், 26. அவரது மனைவி யாஸ்மின், 25. கணவன், மனைவி இருவரும், இங்கு நான்கு மாதங்களாக குடியிருந்து வருகின்றனர். கோகுல், இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.நேற்று

தாம்பரம் :மேற்கு தாம்பரத்தில், வீட்டில் இருந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நான்கு பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.-மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கோகுல், 26. அவரது மனைவி யாஸ்மின், 25. கணவன், மனைவி இருவரும், இங்கு நான்கு மாதங்களாக குடியிருந்து வருகின்றனர். கோகுல், இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.நேற்று முன்தினம், வீட்டில் கோகுல் இருந்த போது, நான்கு பேர் கும்பல் வந்து, வெளியே அழைத்தது. வெளியே வந்தபோது, மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட கோகுல், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், மர்ம நபர்கள் துரத்தி சென்று, சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினர். போலீசார் விரைந்து, படுகாயமடைந்த கோகுலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, மேற்கு தாம்பரம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜெயராம், 23, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X