ஆவடி ரயில்வே கேட் மூடல்விபத்துகளை தடுக்க சுவர்

Added : செப் 05, 2022 | |
Advertisement
ஆவடி :ஆவடி ரயில் நிலையத்தில் தொடரும் விபத்தால், ரயில்வே கேட் அருகே தடுப்பு சுவர் எழுப்ப ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான ஆவடி ரயில் நிலையத்தின் இருபுறமும் 'எல்.சி., கேட் - 8' உள்ளது. இந்த ரயில்வே கேட் பெரும்பாலும் மூடியே இருக்கும்.இந்த ரயில்வே கேட்டை, நாள்தோறும் ௧,௦௦௦த்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு காரணங்களுக்காக
ஆவடி ரயில்வே கேட் மூடல்விபத்துகளை தடுக்க சுவர்


ஆவடி :ஆவடி ரயில் நிலையத்தில் தொடரும் விபத்தால், ரயில்வே கேட் அருகே தடுப்பு சுவர் எழுப்ப ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான ஆவடி ரயில் நிலையத்தின் இருபுறமும் 'எல்.சி., கேட் - 8' உள்ளது. இந்த ரயில்வே கேட் பெரும்பாலும் மூடியே இருக்கும்.இந்த ரயில்வே கேட்டை, நாள்தோறும் ௧,௦௦௦த்திற்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு காரணங்களுக்காக கடந்து செல்கின்றனர்.இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடந்து வந்தன.ஆவடி ரிசர்வ் போலீசார், இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் மீது தொடர்ந்து அபராதம் விதித்து வந்தனர். ஆனாலும், வாகன ஓட்டிகள் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து வந்தனர்.பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து, 'எல்.சி., கேட் 8' ன் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்லாதவாறு 'தண்டவாள குறுக்கு கல்' பயன்படுத்தி தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ரயில் நிலையத்தில் ஏற்படும் தொடர் விபத்தால், தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. 'இதையடுத்து, எல்.சி., கேட் 8 ன் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைவில் துவங்கும்' என்று தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X