இந்திய கம்யூ., நிர்வாகியைகொல்ல முயன்ற மூவர் கைது| Dinamalar

இந்திய கம்யூ., நிர்வாகியைகொல்ல முயன்ற மூவர் கைது

Added : செப் 05, 2022 | |
எம்.கே.பி.நகர் :இந்திய கம்யூ., நிர்வாகியை கொல்ல முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, எம்.கே.பி.நகர், நான்காவது இணைப்பு சாலையை சேர்ந்தவர் வீரபாண்டியன், 61; இந்திய கம்யூ., கட்சியின் தேசிய குழு உறுப்பினர்.இவர், நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக வியாசர்பாடி, முல்லை நகர் சென்றார். அப்போது மூவர் குடிபோதையில் அவ்வழியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த

எம்.கே.பி.நகர் :இந்திய கம்யூ., நிர்வாகியை கொல்ல முயன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, எம்.கே.பி.நகர், நான்காவது இணைப்பு சாலையை சேர்ந்தவர் வீரபாண்டியன், 61; இந்திய கம்யூ., கட்சியின் தேசிய குழு உறுப்பினர்.இவர், நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக வியாசர்பாடி, முல்லை நகர் சென்றார். அப்போது மூவர் குடிபோதையில் அவ்வழியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த வீரபாண்டியன், அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஒருவர், வீரபாண்டியனை தள்ளிவிட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தினார். மற்றொருவர் தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட வந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த வீரபாண்டியன், அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உயிர் தப்பினார்.எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சூர்யபிரகாஷ், 28, அரவிந்த், 28; வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்., நகரைச் சேர்ந்த அஜீத்குமார், 26, ஆகியோர், குடிபோதையில் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X