அடுக்குமாடி குடியிருப்பில்தேங்கும் குப்பையால் சீர்கேடு

Added : செப் 05, 2022 | |
Advertisement
கே.கே., நகர் :சாலிகிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கியுள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமம் ஆற்காடு சாலையில், 'ஜெயின் சுவர்ணகலா' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 120 வீடுகள் உள்ளன. இங்கிருந்து தினமும், 1,200 கிலோ குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பையை அகற்ற, தனியார்



கே.கே., நகர் :சாலிகிராமத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கியுள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமம் ஆற்காடு சாலையில், 'ஜெயின் சுவர்ணகலா' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 120 வீடுகள் உள்ளன. இங்கிருந்து தினமும், 1,200 கிலோ குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பையை அகற்ற, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக அடுக்குமாடி குடியிருப்போர் சார்பில், மாதந்தோறும் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு குப்பை அகற்றப்படவில்லை.இதனால், குடியிருப்பின் முன்பகுதியில் உள்ள ஆற்காடு சாலை நடை பாையில், குப்பை நிரம்பி வழிகிறது.இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நடைபாதையில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு நிலவுகிறது.இதனால், குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X