தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் அவலம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
ஷெனாய் நகர், :அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் குடிக்க குடிநீர் இல்லாமல், ஊழியர்களும் பொதுமக்களும் தினமும் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம், அமைந்தகரை, ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூவில் இயங்கி வருகிறது. இங்கு தரை தளம் கொண்ட மூன்று தளங்களில், மண்டல குழு தலைவர் அலுவலகம், மண்டல அதிகாரி, வருவாய்த்துறை,
தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள்  மாநகராட்சி அலுவலகத்தில் அவலம்

ஷெனாய் நகர், :அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் குடிக்க குடிநீர் இல்லாமல், ஊழியர்களும் பொதுமக்களும் தினமும் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம், அமைந்தகரை, ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவென்யூவில் இயங்கி வருகிறது. இங்கு தரை தளம் கொண்ட மூன்று தளங்களில், மண்டல குழு தலைவர் அலுவலகம், மண்டல அதிகாரி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தேர்தல், மின் வாரியம் உள்ளிட்ட ஏராளமான துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.மேலும், இரண்டாவது தளத்தில் மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகமும் உள்ளது. அனைத்து துறைகளிலும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அதுமட்டுமின்றி பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறவும், வரி செலுத்துதல், கட்டடங்கள் உரிமம் மற்றும் தரைதளத்தில் உள்ள இ - சேவை மையத்திற்கும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மண்டல அலுவலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பல ஆண்டுகளாக பயனின்றி கிடக்கிறது. மூன்று தளங்களிலும் குடிநீர் குழாய் இருந்தும், அதில் தண்ணீர் வராததால், ஒவ்வொரு அறைகளிலும் ஊழியர்களே பணம் கொடுத்து தண்ணீர் 'கேன்' வாங்கி பயன்படுத்துகின்றனர்.பொதுமக்களும், தாகத்தை தணிக்க, அருகில் உள்ள கடைகளில் குடிநீர் வாங்கி அருந்தும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நிலை கருதி, அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X