அ.தி.மு.க., விவகாரத்தில் சட்டசபையில் முடிவு: சபாநாயகர் அப்பாவு

Added : செப் 05, 2022 | |
Advertisement
திருநெல்வேலி : அ.தி.மு.க. வின் உட்கட்சி விவகாரத்தில் தமிழக முதல்வரின் விருப்பப்படி சட்டசபையில் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில் தெரிவித்தார்வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்த தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.அப்பாவு கூறியது: இம்மணிமண்டபத்தில் ரூ. 70
அ.தி.மு.க., விவகாரத்தில் சட்டசபையில் முடிவு: சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி : அ.தி.மு.க. வின் உட்கட்சி விவகாரத்தில் தமிழக முதல்வரின் விருப்பப்படி சட்டசபையில் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில் தெரிவித்தார்

வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்த தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அப்பாவு கூறியது: இம்மணிமண்டபத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். வ.உ.சி., பயின்ற ம.தி.தா., ஹிந்து பள்ளி வளாகத்தில் ஒரு கோடியே 40 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் நாட்டு மக்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் அல்ல. அதற்கும் இந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அ.தி.மு.க.வினர் பல பிரிவுகளாக செயல்படுகின்றனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என சென்றுள்ளனர். அ.தி.மு.க., கொறடா தந்துள்ள மனு குறித்து சட்டசபையில் முடிவெடுக்கப்படும். ஜனநாயக முறைப்படி சட்டசபை முடிவுகள் இருக்கும். அது தான் தமிழக முதல்வரின் விருப்பமாகும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X