கட்சியை விட்டு வெளியேறுவது காங்.,க்கு பாதிப்பு: கார்த்தி எம்.பி., பேட்டி

Added : செப் 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
காரைக்குடி : காங்., கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் அது காங்., கட்சிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என காரைக்குடியில் கார்த்தி எம்.பி., கூறினார்.அவர் கூறியதாவது: செட்டிநாட்டில் விமான போக்குவரத்தை துவக்க அத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மட்டுமின்றி காங்.,ல் இருந்து யார் வெளியே சென்றாலும் அது காங்., கட்சிக்கு தான் பெரிய
Karti, Karti Chidambaram,Congress,காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காரைக்குடி : காங்., கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் அது காங்., கட்சிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என காரைக்குடியில் கார்த்தி எம்.பி., கூறினார்.

அவர் கூறியதாவது: செட்டிநாட்டில் விமான போக்குவரத்தை துவக்க அத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மட்டுமின்றி காங்.,ல் இருந்து யார் வெளியே சென்றாலும் அது காங்., கட்சிக்கு தான் பெரிய பாதிப்பை தரும். காங்., தலைவர் பதவிக்கு ராகுல் நின்றால் மட்டுமே போட்டி இருக்காது.

தொழில் மற்றும் சட்ட ரீதியாக பலர் பா.ஜ.,வில் தஞ்சம் அடைகின்றனர். பா.ஜ.,வில் ரவுடிகள் லிஸ்ட்தான் கூடுகிறது. அசாமில் காங்., வெற்றி பெறும். அ.தி.மு.க.,வை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க.,வை முடக்க சூழ்ச்சி நடக்கிறது.


latest tamil news



தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோர் அரசியல் நாகரிகத்துடன், கருத்து மோதல் மட்டுமே செய்ய வேண்டும். புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதை எதிர்க்கிறேன்.

சிவகங்கையில் வேலுநாச்சியார் போலீஸ் பயிற்சி மையம் அமைக்கவும், காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்துமாறும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharma - Madurai,இந்தியா
06-செப்-202207:08:26 IST Report Abuse
Dharma இதுவும் ஒரு வாரிசுதான்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
06-செப்-202206:56:35 IST Report Abuse
vadivelu மிக சரியாக ஒன்றை ஒப்பு கொண்டுள்ளார், பல காலம் ஆட்சியில் இருந்து ரவுடிகளை வளர்த்தோம், அவர்கள் இப்போது பா ஜா காவில் சேர்ந்து விட்டார்கள் என்கிறார்.பாவம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-செப்-202205:32:44 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரசுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு குறைகிறது. அதை மறைக்க இது போல சிலர் கருத்துகள் சொல்லி திசை திருப்ப முயல்கிறார்கள். திமுக போல காங்கிரசும் ஒரு பிரைவேட் லிமிட்டட் கம்பெனி போல செயல்படுவதால் இவர்களைப்போன்றோர் ஆதங்கப்பட முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-செப்-202207:47:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வடநாட்டில் பாஜாகாக்கு சங்குன்னு செய்தி வந்திருக்கே. அங்க வந்து கொஞ்சம் பாராயணம் பண்ணலாமே காசி....
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-செப்-202219:07:32 IST Report Abuse
Kasimani Baskaran"பாஜாகாக்கு சங்குன்னு" - சென்ற முறையும் அதே போலத்தான் எதிரிக்கட்சியினர் உருட்டினார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X