பன்னீர் பதவி பறிப்பா? சபாநாயகர் அப்பாவு பதில்!

Added : செப் 05, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருநெல்வேலி: ''அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி, சட்டசபையில் முடிவெடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.வ.உ.சிதம்பரனாரின், 151வது பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.தொடர்ந்து அப்பாவு கூறியதாவது: இந்த
ADMK,Panneerselvam,Appavu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி: ''அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி, சட்டசபையில் முடிவெடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.

வ.உ.சிதம்பரனாரின், 151வது பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து அப்பாவு கூறியதாவது: இந்த மணிமண்டபத்தில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒலி, ஒளிக் காட்சி அமைக்கும் பணிகள்விரைவில் துவங்கும். வ.உ.சி., பயின்றம.தி.தா., ஹிந்து பள்ளி வளாகத்தில், 1 கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் நாட்டு மக்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் அல்ல. அதற்கும், இந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.


latest tamil news


அ.தி.மு.க.வினர் பல பிரிவுகளாக செயல்படுகின்றனர். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என, சென்றுள்ளனர். அ.தி.மு.க., கொறடா தந்துள்ள, பன்னீர்செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி பறிப்பு மனு குறித்து, சட்டசபையில் முடிவெடுக்கப்படும். ஜனநாயக முறைப்படி சட்டசபை முடிவுகள் இருக்கும். அது தான் தமிழக முதல்வரின் விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
12-செப்-202220:05:00 IST Report Abuse
sankar ......
Rate this:
Cancel
06-செப்-202209:35:10 IST Report Abuse
ஆரூர் ரங் அப்பாவு பதவியைத்தான் பறிக்க😏 வேண்டும். தகுதியற்றவர்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
06-செப்-202209:04:23 IST Report Abuse
Matt P ஜனநாயக முறைப்படி சட்டசபை முடிவுகள் இருக்கும். அது தான் தமிழக முதல்வரின் விருப்பமாகும், முதல்வரின் விருப்படி தான் சட்டசபை நடக்க வேண்டுமா? சபாநாயகர் தானே சட்டமன்றத்தின் பொதுவானவர். முதலவர்க்கு வேறு மாதிரி யோசனை இருந்தால் அவர் விருப்பபடி தான் சபாநாயகர் செயல்படுவாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X