வரத்து குறைவால் விலை அதிகரிப்பு:மழையால் தக்காளி பாதிப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை சந்தைக்கு, வரத்து குறைவு மற்றும் ஓணம் பண்டிகை காரணமாக, தக்காளி விலை உயர்ந்து வருகிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தக்காளி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, விளைவிக்கப்படும் தக்காளி, உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. உடுமலையில் தக்காளி வரத்து அதிகரித்த நிலையில்,
வரத்து குறைவால் விலை அதிகரிப்பு:மழையால் தக்காளி பாதிப்பு

உடுமலை:உடுமலை சந்தைக்கு, வரத்து குறைவு மற்றும் ஓணம் பண்டிகை காரணமாக, தக்காளி விலை உயர்ந்து வருகிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தக்காளி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, விளைவிக்கப்படும் தக்காளி, உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. உடுமலையில் தக்காளி வரத்து அதிகரித்த நிலையில், விலை கடும் சரிவை சந்தித்தது.கடந்த மாதம், 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 60 முதல், 100 ரூபாய் என்ற அளவில் மட்டுமே விற்றது. இதனால், விவசாயிகள் பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுபடியாகாமல், வயல்களில் காய்களை பறிக்காமலும், செடிகளுடன் வயல்களில் உழவு ஓட்டியும், பிடுங்கி அழித்தும் வந்தனர்.இந்நிலையில், கடந்த இரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக, தக்காளி செடிகள் பாதித்ததோடு, காய்களும் பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பழங்கள் அழுகி, கழிவு அபரிமிதமாக காணப்பட்டது.வரத்து குறைந்த நிலையில், கடந்த வாரம், ஒரு பெட்டி, 150 ரூபாய் வரை உயர்ந்தது. தொடர் மழை காரணமாக, தக்காளி வரத்து பாதித்த நிலையில், கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை காரணமாக, தக்காளிக்கு விலை உயர்ந்துள்ளது.உடுமலை சந்தையிலிருந்து, கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளுக்கு, தக்காளி விற்பனைக்கு செல்கிறது. இதனால், தக்காளி விலை உயர்ந்து, நேற்று ஒரு பெட்டி, 650 ரூபாய் வரை விற்றது.வியாபாரிகள் கூறுகையில், 'மழைக்கு தக்காளி செடிகள் மற்றும் பழங்கள் அழுகியதால், மகசூல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரத்து குறைந்த நிலையிலும், ஓணம் பண்டிகை தேவை அதிகரிப்பு காரணமாக, விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X