ஊட்டி கொள்ளை சம்பவம் மேலும் இருவரிடம் விசாரணை

Added : செப் 06, 2022 | |
Advertisement
ஊட்டி;ஊட்டியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ்,55, இவரது மகன் யுவராஜ்,25. இருவரும் நேற்று முன்தினம் ஊட்டியில் காய்கறி வியாபாரிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வந்தனர். காலை, 5:30 மணிக்கு ஊட்டி ஏ.டி.சி., மார்க்கெட் பகுதியில் இவர்களைதிடீரென ஒரு கும்பல் வழிமறித்து, அரிவாளால் தாக்கி

ஊட்டி;ஊட்டியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ்,55, இவரது மகன் யுவராஜ்,25. இருவரும் நேற்று முன்தினம் ஊட்டியில் காய்கறி வியாபாரிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வந்தனர். காலை, 5:30 மணிக்கு ஊட்டி ஏ.டி.சி., மார்க்கெட் பகுதியில் இவர்களைதிடீரென ஒரு கும்பல் வழிமறித்து, அரிவாளால் தாக்கி பணப்பையை பறித்தனர். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் மணிக்குமார். தலைமையில் தனிப்படை போலீசார் கும்பலை தேடி சென்றனர். நேற்று முன்தினம், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் 18 வயதுடைய இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி., ஆசிஷ் ராவத் கூறுகையில்,''ஊட்டியில் நேற்று முன்தினம் நடந்த கொள்ளை சம்பவத்தில் அன்றையதினம் இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்று(நேற்று) காலையில் காங்கயத்தில் தனிப்படை போலீசார் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது தெரியவரும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X