நீ ஏறி ஆடு கபிலா; இது நம்ம காலம்!| Dinamalar

நீ ஏறி ஆடு கபிலா; இது நம்ம காலம்!

Added : செப் 06, 2022 | |
பொள்ளாச்சி:இந்திய அணிக்காக விளையாடிய பொள்ளாச்சி எஸ்.டி.சி., மாணவருக்கு, கல்லுாரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.ஈரான் தலைநகர் டெகரானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான, 14வது ஆசிய வாலிபால் போட்டி கடந்த மாதம் நடந்தது. அதில், பங்கேற்ற இந்திய அணியில், பொள்ளாச்சி எஸ்.டி.சி., மாணவர் கபிலன் தேர்வு செய்யப்பட்டார்.இவர் அந்த போட்டியில் விளையாடி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
நீ ஏறி ஆடு கபிலா; இது நம்ம காலம்!

பொள்ளாச்சி:இந்திய அணிக்காக விளையாடிய பொள்ளாச்சி எஸ்.டி.சி., மாணவருக்கு, கல்லுாரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.ஈரான் தலைநகர் டெகரானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான, 14வது ஆசிய வாலிபால் போட்டி கடந்த மாதம் நடந்தது. அதில், பங்கேற்ற இந்திய அணியில், பொள்ளாச்சி எஸ்.டி.சி., மாணவர் கபிலன் தேர்வு செய்யப்பட்டார்.இவர் அந்த போட்டியில் விளையாடி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய அணி, 'லீக்' சுற்றில், தாய்லாந்துடன், 3:1 என்ற செட்களிலும், தென்கொரியாவுடன், 3:0 என்ற செட்களிலும் வென்றது. ஜப்பானுடன், 2:3 என்ற செட்களில் தோல்வியுற்றாலும் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.காலிறுதி போட்டியில், சீன தைபே அணியை, 3:1 என்ற செட்களில் வென்று, அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில், 3:0 என்ற செட்களில் தோல்வியடைந்தாலும், 3 மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் தென்கொரியா அணியை, 3:2 என்ற செட்களில் வென்று மூன்றாம் இடத்தை இந்திய அணியினர் பெற்றனர்.இதன் வாயிலாக, இந்திய அணி, 2023ல் நடைபெறும் உலக வாலிபால் போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்திய அணிக்காக விளையாடிய மாணவர் கபிலனை, கல்லுாரி தலைவர் சேதுபதி, துணை தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜயமோகன், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி, வாலிபால் பயிற்சியாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தன் இணை செயலர் செல்லமுத்து ஆகியோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X