பழைய தொழில்நுட்பத்தில் ஒளிரும் விளக்குகளால்...வீணாகும் மின்சாரம்! எல்.இ.டி., சோலார் விளக்குக்கு மாறுவதே சிறந்தது

Added : செப் 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள, ஒன்பது பேரூராட்சிகளில் எல்.இ.டி., மற்றும் 'சோலார்' தெருவிளக்குகள் பொருத்தப்படாததால், மின்விரயமாவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், கோட்டூர், ஜமீன் ஊத்துக்குளி, சமத்துார், சூளேஸ்வரன்பட்டி, கிணத்துக்கடவு மற்றும் பெரிய நெகமம் ஆகிய, ஒன்பது
 பழைய தொழில்நுட்பத்தில் ஒளிரும் விளக்குகளால்...வீணாகும் மின்சாரம்! எல்.இ.டி., சோலார் விளக்குக்கு மாறுவதே சிறந்தது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள, ஒன்பது பேரூராட்சிகளில் எல்.இ.டி., மற்றும் 'சோலார்' தெருவிளக்குகள் பொருத்தப்படாததால், மின்விரயமாவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், கோட்டூர், ஜமீன் ஊத்துக்குளி, சமத்துார், சூளேஸ்வரன்பட்டி, கிணத்துக்கடவு மற்றும் பெரிய நெகமம் ஆகிய, ஒன்பது பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில், 924 வீதிகளில், 1.44 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.பேரூராட்சிகளை பொறுத்தவரையில் கடந்த, 30 ஆண்டுகளாக அதிக பிரகாசம் தேவைப்படும் பகுதிகள் மற்றும் சந்திப்பு பகுதிகளில் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற வெளிச்சம் தரும் 'சோடியம்' விளக்குகள், சாதாரண வீதிகளில் 'டியூப் லைட்'கள் பொருத்தப்பட்டன.


அடிக்கடி பழுது


இவை, 40 வாட்ஸ் முதல் 100 வாட்ஸ் மின்சாரத்தில் ஒளிரக்கூடியவை. அதிக மின்சாரம் விரயமாகி, அடிக்கடி பழுதானது.அதன்பின், அறிவியல் முன்னேற்றத்தால், கடந்த, 10 ஆண்டுகளாக, குறைந்த மின் பயன்பாட்டில் அதிக வெளிச்சம், ஆயுட்காலம் கொண்ட, சி.எப்.எல்., (காம்பேக்ட் புளோரசன்ட் லைட்), எல்.இ.டி., (லைட் எமிட்டிங் டயோடு) மற்றும் 'சோலார்' விளக்குகள் பொருத்தப்படுகின்றன.இவை குறைந்தபட்சமாக, 20 வாட்ஸ் முதல் அதிகபட்சமாக, 60 வாட்ஸ் வரை மின் பயன்பாட்டில் ஒளிரக்கூடியது.


இரு சதவீதமே!


வருவாய் கோட்டத்தில், ஒன்பது பேரூராட்சிகளில் மொத்தம், 7,158 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், இன்னமும், 58 சதவீதம் (4,177 விளக்குகள்) 'டியூப் லைட்' பொருத்தப்பட்டு உள்ளன. 19 சதவீதத்துக்கு (1,422 விளக்குகள்) எல்.இ.டி., விளக்குகளும், இரண்டு சதவீதத்துக்கு, 146 'சோலார்' விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளன.அதிக மின் பயன்பாடுள்ள தொழில்நுட்பத்தில் இயங்கும், 'டியூப் லைட்' மாற்றப்படாமல் உள்ளதால், அடிக்கடி பழுதாகி அவற்றை மாற்றுவதற்கும், மின் பயன்பாடு செலவும் அதிகரித்து, பேரூராட்சிகளுக்கு அதிகப்படியான நிதி வீணாகிறது.


மாற்றம் தேவை


எல்.இ.டி., மற்றும் 'சோலார்' விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளதால், அரசு மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கும் நிதியில் அதிகப்படியான நிதி, மின் கட்டணமாக செலுத்தும் நிலையே நீடிக்கிறது.மேலும், இவை தானியங்கி முறையில் இல்லாததால், பணியாளர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தெருவிளுக்குகளை ஒளிரச்செய்யவும், அணைக்கவும் களத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.சிலர் இப்பணியை செய்யாமல் அலட்சியம் காட்டுவதால், பல இடங்களில், 24 மணி நேரமும் தெருவிளக்குகள் ஒளிருவதை காண முடிகிறது. அறிவியலில் முன்னேற்றமடைந்து பல உயரங்களை நாடு தொட்டு வருகிறது. மத்திய அரசு 'சோலார்' போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக, மின் உற்பத்தி செய்வதற்கு அதிக முக்கியத்துவமும், பல மானியங்களும் வழங்கி வருகிறது.இந்நிலையில் பேரூராட்சிகளில் இன்னமும், 'டியூப் லைட்' பயன்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.


அலட்சியம்


பேரூராட்சிகள் சார்பில் எல்.இ.டி., மற்றும் 'சோலார்' விளக்கு அமைக்க நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தாலும், அரசு போதிய அளவு நிதி ஒதுக்காமல் அலட்சியமாக உள்ளது.மின் பயன்பாட்டை குறைக்க அனைத்து பேரூராட்சிகளிலும், எல்.இ.டி மற்றும் 'சோலார்' விளக்குகள் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி எதிர்காலம் 'சோலார்' என்பதை கருத்தில் கொண்டு, 'சோலார்' விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முனைப்பு காட்டாத தமிழகம்!

பேரூராட்சி செயல் அலுவலர்கள் கூறியதாவது:'டியூப்' வகை விளக்குகளை மாற்றி, எல்.இ.டி., மற்றும் 'சோலார்' விளக்குகள் அமைக்க அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. ஒரு 'சோலார்' விளக்கு அமைப்பு பொருத்த அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.இதனால், 'சோலார்' விளக்குகள் அமைக்க அரசு முனைப்பு காட்டுவதில்லை. ஆனால், குஜராத், கேரள மாநிலங்களில் 'சோலார்' விளக்குகள் பொருத்தப்படுகின்றன.ஆனால், அரசு அதற்கான ஏற்பாடுகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. விரைவில் நிதி கிடைத்தால் பழைய தொழில்நுட்பத்தில் இருக்கும் விளக்குகள், 'சோலார்' முறைக்கு மாற்றப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X