அதிவேக காற்றுடன் மழை: ரோட்டில் சாய்ந்த மரங்கள்

Added : செப் 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ரோட்டோரங்களில் உள்ள மரங்கள் காற்றுக்கு சாய்ந்து வருவதால், போக்குவரத்து பாதித்து விபத்துகள் ஏற்படுகின்றன.பொள்ளாச்சி - வால்பாறை, மீன்கரை, உடுமலை மற்றும் ஆனைமலை - சேத்துமடை, ஆனைமலை - உடுமலை, ஆழியாறு உள்ளிட்ட ரோட்டோரங்களில், எண்ணற்ற மரங்கள் உள்ளன.இவற்றில், பெரும்பாலான மரங்களில் கிளைகள் தொங்கிக்கொண்டு இருப்பதுடன்,
அதிவேக காற்றுடன் மழை: ரோட்டில் சாய்ந்த மரங்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ரோட்டோரங்களில் உள்ள மரங்கள் காற்றுக்கு சாய்ந்து வருவதால், போக்குவரத்து பாதித்து விபத்துகள் ஏற்படுகின்றன.பொள்ளாச்சி - வால்பாறை, மீன்கரை, உடுமலை மற்றும் ஆனைமலை - சேத்துமடை, ஆனைமலை - உடுமலை, ஆழியாறு உள்ளிட்ட ரோட்டோரங்களில், எண்ணற்ற மரங்கள் உள்ளன.இவற்றில், பெரும்பாலான மரங்களில் கிளைகள் தொங்கிக்கொண்டு இருப்பதுடன், வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளன. கடந்த, ஒரு வாரமாக, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 23 கி.மீ., வேகத்தில் அதிவேக காற்றுடன், மழை பெய்வதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்படுகின்றன. நேற்று மாலை மழை பெய்த போது, காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் ஆவல்சின்னாம்பாளையம் அருகே, 'மே பிளவர்' மரம் வேரோடு சாய்ந்தது. மரம் ரோட்டின் குறுக்கே விழுந்ததால் வெட்டி அகற்றப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.ஆனைமலை - சேத்துமடை ரோட்டில், மாசாணியம்மன் கோவில் குண்டம் அருகே தென்னை மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதித்தது. மழை காலம் துவங்கியுள்ளதால், ஆபத்தான மரக்கிளைகள் மற்றும் மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X