திறந்தவெளியில் பொலிவிழக்கும் சிலைகள்: மணிமண்டபம் பணியை துவக்க கோரிக்கை

Added : செப் 06, 2022 | |
Advertisement
உடுமலை:திருமூர்த்திமலையில், மணிமண்டபம் கட்டுமான பணிகள், துவங்காமல் இருப்பதால், திறந்தவெளியில் பழங்கால சிலைகள் பொலிவிழந்து வருகிறது.உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்ட பாளையத்தை, எத்தலப்பர் வம்சாவளியினர் ஆட்சி செய்தனர்.கடந்த, 1801ம் ஆண்டில், 'ஆண்ட்ரே கேதிசு' என்பவரை துாக்கிலிட்டு, ஆங்கிலேயருக்கு எதிரான போரில், தங்களது எதிர்ப்பை தளி பாளையக்காரர்கள் பதிவு
திறந்தவெளியில் பொலிவிழக்கும் சிலைகள்: மணிமண்டபம் பணியை துவக்க கோரிக்கை

உடுமலை:திருமூர்த்திமலையில், மணிமண்டபம் கட்டுமான பணிகள், துவங்காமல் இருப்பதால், திறந்தவெளியில் பழங்கால சிலைகள் பொலிவிழந்து வருகிறது.உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்ட பாளையத்தை, எத்தலப்பர் வம்சாவளியினர் ஆட்சி செய்தனர்.கடந்த, 1801ம் ஆண்டில், 'ஆண்ட்ரே கேதிசு' என்பவரை துாக்கிலிட்டு, ஆங்கிலேயருக்கு எதிரான போரில், தங்களது எதிர்ப்பை தளி பாளையக்காரர்கள் பதிவு செய்தனர். இதையடுத்து, நடந்த போரில், ஆங்கிலேய அரசால், தளி பாளையம் அழிக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எத்தலப்பருக்கு திருமூர்த்திமலையில், மணி மண்டபம் கட்டப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எத்தலப்பருக்கு, மணி மண்டபம் கட்ட, 2 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.நிதியில், மணி மண்டபம் மற்றும் உடுமலையில், அவரது உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காண்டூர் கால்வாய் அருகே, மணி மண்டபம் கட்ட இடமும் தேர்வு செய்யப்பட்டது.சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வரும், மணி மண்டபம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வித பணிகளும் துவங்கவில்லை.இந்நிலையில், காண்டூர் கால்வாய் கரையில், திறந்தவெளியில், வைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் வம்சாவளியினர் சிலைகள், பொலிவிழந்து வருகின்றன.சிலைகள் சேதப்படுத்தப்படும் அபாயமும் உள்ளது. எனவே, மணிமண்டப கட்டுமான பணிகளை, உடனடியாக துவக்க, உடுமலை பகுதி மக்கள், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X