கல்குவாரியில் குதிக்கும் போராட்டம்:பெண்கள் ஆவேசம்; போலீசார் சமரசம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே கல் குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பல்லடம், கொத்துமுட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார்; விவசாயி. கல் குவாரியால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி, ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.விவசாயிக்கு ஆதரவாக, கல்
கல்குவாரியில் குதிக்கும் போராட்டம்:பெண்கள் ஆவேசம்; போலீசார் சமரசம்

பல்லடம்:பல்லடம் அருகே கல் குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பல்லடம், கொத்துமுட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார்; விவசாயி. கல் குவாரியால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி, ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.விவசாயிக்கு ஆதரவாக, கல் குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது. ஆவேசத்துடன் புறப்பட்ட பெண்களை, போலீசார் தடுத்து நிறுத்திய சமாதானம் செய்தனர்.விவசாயிகள் கூறுகையில், ''விதிமீறும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.இன்று (நேற்று) பேச்சு நடத்திய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே கூறி வருகின்றனர். எப்போது என்ற கேள்விக்கு பதில் இல்லை.இந்த குவாரியில் விடாவிட்டால் பரவாயில்லை. வேறு குவாரியில் குதித்து உயிரை மாய்த்து கொள்வோம்,'' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X