இளங்கலை பாடத்தில்திருப்பூரின் வரலாறு:'செனட்' உறுப்பினர் தகவல்

Added : செப் 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:''பாரதியார் பல்கலை இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கு திருப்பூர் வரலாறு மற்றும் திருப்பூர் தொழில் வளர்ச்சி வரலாறு ஆகியவை பாடமாக வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என, ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு திருப்பூர் பெரும் பங்காற்றுகிறது. தமிழகம் முழுவதும் வேலை தேடும் இளைஞர்களுக்கு,

திருப்பூர்:''பாரதியார் பல்கலை இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கு திருப்பூர் வரலாறு மற்றும் திருப்பூர் தொழில் வளர்ச்சி வரலாறு ஆகியவை பாடமாக வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என, ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு திருப்பூர் பெரும் பங்காற்றுகிறது. தமிழகம் முழுவதும் வேலை தேடும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு மையமாக திகழ்வது திருப்பூர் நகரம்.நம் நாட்டின் அந்நிய செலாவணிக்கும் பெரும் பங்கை திருப்பூர் வழங்குகிறது. நவீன தொழில் வளர்ச்சி மட்டுமில்லாமல் பழமையான வரலாறும் நிரம்பியது. திருப்பூரின் வரலாற்றை கூறும் கல்வெட்டுகள் அவிநாசி, திருமுருகன்பூண்டி, சர்க்கார் பெரியபாளையம் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன.இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பூரின் வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக பாரதியார் பல்கலை இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கு திருப்பூரின் வரலாறு பாடமாக வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X