பிட்டுக்கு மண் சுமந்த திருவிழாகோவிலில் பக்தர்கள் பரவசம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
அவிநாசி:திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில், 70வது ஆண்டு பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது.ஸ்ரீசொக்கநாதர், ஸ்ரீமீனாட்சியம்மையாக எழுந்தருளிய, விஸ்வேஸ்வரர் மற்றும் விசாலாட்சி தாயாருக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. வந்தியம்மை தன் நிலை வருந்தி இறைவனிடம் வேண்டுவது, கடவுள் கூலி ஆள் வேடத்தில் மண் சட்டி, மண்
பிட்டுக்கு மண் சுமந்த திருவிழாகோவிலில் பக்தர்கள் பரவசம்

அவிநாசி:திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில், 70வது ஆண்டு பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது.ஸ்ரீசொக்கநாதர், ஸ்ரீமீனாட்சியம்மையாக எழுந்தருளிய, விஸ்வேஸ்வரர் மற்றும் விசாலாட்சி தாயாருக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. வந்தியம்மை தன் நிலை வருந்தி இறைவனிடம் வேண்டுவது, கடவுள் கூலி ஆள் வேடத்தில் மண் சட்டி, மண் வெட்டியுடன் வருவது, வைகை ஆற்றுக்கரையில் படுத்து உறங்குவது.பாண்டிய மன்னன் பிரம்மால் அடிப்பது, அதன்பின், சுவாமி பிட்டுக்கு மண் சுமந்து, கரையை அடைப்பது, எம்பெருமான் அருள்பாலிப்பது போன்ற காட்சிகளை, சிவாச்சார்யார்கள் நினைவு கூர்ந்தனர். சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரராக எழுந்தருளி, ரத வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X