வேளாண் விற்பனை துறையில்ஒருங்கிணைப்பாளர் பணி வாய்ப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் பங்கேற்க

பொள்ளாச்சி:வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில், பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள தகுதியானவர்களுக்கு உதவி செய்ய, கோவை மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அந்த ஒருங்கிணைப்பாளர்கள், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கிக் கடன் பெற்றிட உதவுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், இளநிலை பட்டதாரியாக இருக்க வேண்டும். வேளாண் சார்ந்த நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.வங்கிகளுடன் இணைந்து செயல்பட்ட முன் அனுபவமுள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு முகவர்கள், ஆலோசனை நிறுவனங்கள், தனிநபர் தொழில் வல்லுனர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களை tn.pmfme.@gmatil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும், 10 தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை, வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X