'' மக்கள் நலனே உயிர் மூச்சு''.... இன்று தினமலர் நாளிதழுக்கு 72 -வது பிறந்த நாள்

Updated : செப் 07, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (74) | |
Advertisement
நமது 'தினமலர்' நாளிதழ் இன்று (செப்.,06) 72வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழக மக்களின் நாடித் துடிப்பாக விளங்கி வரும் தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' 1951ல் துவங்கி இந்த, 72 ஆண்டுகளில், நாட்டு நலனுக்காக, மக்கள் பணிக்காக, 'தினமலர்' சிந்தித்ததும்,சாதித்ததும் பல. சந்தித்த தடைகற்களை வாசகர்கள் துணையோடு வென்றும் வந்திருக்கிறது.தமிழ் பத்திரிகை உலகில் நவீன 'ஆப்செட்'
இன்று, தினமலர் ,நாளிதழ் ,வயது 72

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நமது 'தினமலர்' நாளிதழ் இன்று (செப்.,06) 72வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழக மக்களின் நாடித் துடிப்பாக விளங்கி வரும் தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' 1951ல் துவங்கி இந்த, 72 ஆண்டுகளில், நாட்டு நலனுக்காக, மக்கள் பணிக்காக, 'தினமலர்' சிந்தித்ததும்,சாதித்ததும் பல. சந்தித்த தடைகற்களை வாசகர்கள் துணையோடு வென்றும் வந்திருக்கிறது.

தமிழ் பத்திரிகை உலகில் நவீன 'ஆப்செட்' அச்சு முறையில் வெளிவந்த முதல் நாளிதழ், தினமலர் தான். வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர், மாணவர் பதிப்பான 'பட்டம்' என பல்வேறு புதுமைகளை புகுத்தி, ''மக்களின் நலனே உயிர் மூச்சு''.... 'மக்களின் நாடித் துடிப்பாக'' விளங்கி வருகிறது.


latest tamil news



சென்னை, வேலுார், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் என, 10 பதிப்புகளாக வெளி வருவதோடு, 'தினமலர்' சென்னை பதிப்பு தற்போது பெங்களூரில் கிடைப்பது, நீங்கள் அறிந்ததே. வாசகர் உணர்வுடன், எப்போதும் பின்னிப் பிணைந்து, அறிய மைல்கல்லை அடைந்துள்ள நமது 'தினமலர்' நாளிதழ், இந்தாண்டு ஜூன் முதல், தலைநகர் டில்லியிலும் கிடைக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-செப்-202208:04:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாழ்த்துக்கள். உயர்ந்த நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை. அதே மாண்புடன் செயல்படுகிறீர்களா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். மனசாட்சியுடன் - இருந்தால் - செல்லும் பாதையை சீர்படுத்திக்கொள்ளுங்கள். நிறுவனரின் நல்ல பெயரை பாதுகாக்க முயற்சி செய்யுங்க. இதை போடமாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் நல்லதை சொல்றது என்னுடைய பாணி.
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-செப்-202218:59:53 IST Report Abuse
ANANDAKANNAN K கல்லூரி படைப்பை முடித்த அணைத்து மாணவர்களும் நாட்டு நடப்பை அப்படியே அறிய நமது தினமலர் தினசரி நாளிதழ் படித்தாலே போதுமானது, எந்த கலப்படமும் இல்லாமல், தூய தமிழில் புரியும் நடையில் செய்திகள் வரும, முதலாவதாக யாரையும் கொச்சை படுத்தும் செய்திகள் நம் நாளிதழில் வருவதில்லை, அதுபோக கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, பொறியில் துறை,வாகன துறை,கணினி துறை, மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம்,வரலாற்று தொகுப்புகள்,சிறு கதை, சிரிப்புகள்,பொருளாதார கட்டுரைகள்,அரசியல் தலையங்கம், என்று தினமும் நம்மை புதுமையடைய செய்கிறது,எந்த செய்தி நிறுவனமாக இருந்தாலும் ஆளும் கட்சியை அதிகம் விமரிசிக்க மாட்டார்கள் ஆனால் நம் தினமலர் தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்ட தயங்குவதில்லை, மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறது அதே சமயம் அவர்கள் கொண்டுவரும் நல்ல திட்டங்களையும் மக்களுக்கு புரியும் நடையில் எழுதுகிறார்கள், மேலும் கனிமவள கொள்ளை குறித்த தகவல்,மத மாற்று சக்திகளின் செய்திகள்,திவீரவாதிகள் சம்பத்தப்பட்ட செய்திகள் அதுவாக இருந்தாலும் நெஞ்சுரம் கொண்டு அதை செய்தியாக வெளியிடுகிறார்கள், இன்னும் இந்த பூமிப்பந்து இருக்கும் வரை தினமலர் நாளிதழ் தன் கொள்கையில் நின்று மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் என்று மனதார பாராட்டும், வாசகர் திரு.ஆனந்தக்கண்ணன் திருப்பூர்.
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
06-செப்-202218:47:51 IST Report Abuse
T.sthivinayagam .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X