குறுமைய கோ--கோ போட்டி:டி.கே.எஸ்., பள்ளி முதலிடம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
கோவை:சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான கோ-கோ போட்டியின், அனைத்து வயது பிரிவுகளிலும் டி.கே.எஸ்., பள்ளி அணி வெற்றி பெற்றுமுதலிடம் பிடித்தது.கோவை கல்வி மாவட்டம், ஆ குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கோ-கோ மற்றும் ஹேண்ட்பால் போட்டி, இளங்கோ மெட்ரிக் பள்ளி சார்பில், சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.இப்போட்டியில்,
குறுமைய கோ--கோ போட்டி:டி.கே.எஸ்., பள்ளி முதலிடம்

கோவை:சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான கோ-கோ போட்டியின், அனைத்து வயது பிரிவுகளிலும் டி.கே.எஸ்., பள்ளி அணி வெற்றி பெற்றுமுதலிடம் பிடித்தது.கோவை கல்வி மாவட்டம், ஆ குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கோ-கோ மற்றும் ஹேண்ட்பால் போட்டி, இளங்கோ மெட்ரிக் பள்ளி சார்பில், சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.இப்போட்டியில், 35 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டனர். நேற்று நடந்த கோ-கோ போட்டியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவுகளில், டி.கே.எஸ்., பள்ளி அணி முதலிடம் பிடித்து அசத்தியது. மூன்று பிரிவுகளிலும் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.போட்டி முடிவுகள்: 14 வயது பிரிவில், டி.கே.எஸ்., பள்ளி அணி, 18-12; 17 வயது பிரிவில், 24-11; 19 வயது பிரிவில், 25-15 என்ற புள்ளிக்கணக்கில் ரத்தினபுரி மாநகராட்சி அரசு பள்ளி அணியை வீழ்த்தியது.ஹேண்ட்பால் போட்டி முடிவுகள்: 17 வயது பிரிவில், ஹோலி டிரினிட்டி பள்ளி அணி, 18-3 என்ற கோல் கணக்கில் விமல் ஜோதி பள்ளி அணியையும்; 19 வயது பிரிவில் , பி.ஆர்.சித்தா நாயுடு பள்ளி அணி, 7-1 என்ற கோல் கணக்கில் எஸ்.இ.எஸ்., பள்ளி அணியையும் வீழ்த்தி முதலிடம் பெற்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X