புதுமைப் பெண் திட்டம்:3,596 மாணவியர் பயன்| Dinamalar

புதுமைப் பெண் திட்டம்:3,596 மாணவியர் பயன்

Added : செப் 06, 2022 | |
கோவை:புதுமைப் பெண் திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 3,596 மாணவியர் பயனடைகின்றனர்.தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'புதுமைப் பெண்' திட்டத்தை, சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கோவை வேளாண் பல்கலையில் நடந்த, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்ட விழாவில், உயர்கல்வி
புதுமைப் பெண் திட்டம்:3,596 மாணவியர் பயன்

கோவை:புதுமைப் பெண் திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 3,596 மாணவியர் பயனடைகின்றனர்.தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'புதுமைப் பெண்' திட்டத்தை, சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கோவை வேளாண் பல்கலையில் நடந்த, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்ட விழாவில், உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும், 1,000ரூபாய் உதவித்தொகையை, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். 620 மாணவியருக்கு உதவி தொகைக்கான கடன் அட்டை (டெபிட் கார்டு) வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 199 கல்லுாரிகளை சேர்ந்த, 3,596 மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் சமீரன், எம்.பி., நடராஜன், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X