மின் கட்டணம் உயர்த்தினால் 'ஸ்டிரைக்'விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு

Added : செப் 06, 2022 | |
Advertisement
சூலுார்;மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்காவிட்டால், வேலை நிறுத்தம் செய்வது, என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், சோமனுார் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. மின்

சூலுார்;மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்காவிட்டால், வேலை நிறுத்தம் செய்வது, என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், சோமனுார் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. மின் கட்டண உயர்வு அறிவிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:எட்டு ஆண்டுகளாக ஒப்பந்த படி கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம். நுால் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது. இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கூலியை பெற்று, தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். மின் கட்டணத்தை உயர்த்தினால், விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால், வேலை நிறுத்தம் செய்வது என, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X