வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவியர், 'ஹிஜாப்' அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. வடக்கு கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவியர் பள்ளி வளாகத்தில் ஓணம் பண்டிகையை நேற்று கொண்டாடினர்.
![]()
|
மாணவியர் புடவை அணிந்து வந்து ஆடிப்பாடி, நடனமாடினர். அப்போது பல முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்தபடி தங்கள் தோழியருடன் சேர்ந்து நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
கேரளாவின் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து, பலரும் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த காங்., - எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர், இந்த வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.