சர்வதேச ஸ்னூக்கர் போட்டி; தங்கவயல் வீராங்கனை அபாரம்| Dinamalar

சர்வதேச ஸ்னூக்கர் போட்டி; தங்கவயல் வீராங்கனை அபாரம்

Added : செப் 06, 2022 | |
தங்கவயல்--ஐரோப்பாவில் நடந்த ஸ்னுாக்கர் போட்டியில் தங்கவயல் வீராங்கனை கீர்த்தனா வெண்கல பதக்கம் வென்றார்.சர்வதேச ஸ்னுாக்கர் விளையாட்டு போட்டி, ஐரோப்பாவின் ருமேனியாவில் நடந்தது. 21 வயதுக்கு உட்பட்ட வயதினருக்கான போட்டியில், இந்திய வீராங்கனை தங்கவயலை சேர்ந்த கீர்த்தனா பாண்டியன், ௧௭, வெண்கலப் பதக்கம் வென்றார்.இவர் படித்து வரும் ராபர்ட்சன்பேட்டை பகவான் மஹாவீர் ஜெயின்
சர்வதேச ஸ்னூக்கர் போட்டி; தங்கவயல் வீராங்கனை அபாரம்



தங்கவயல்--ஐரோப்பாவில் நடந்த ஸ்னுாக்கர் போட்டியில் தங்கவயல் வீராங்கனை கீர்த்தனா வெண்கல பதக்கம் வென்றார்.சர்வதேச ஸ்னுாக்கர் விளையாட்டு போட்டி, ஐரோப்பாவின் ருமேனியாவில் நடந்தது. 21 வயதுக்கு உட்பட்ட வயதினருக்கான போட்டியில், இந்திய வீராங்கனை தங்கவயலை சேர்ந்த கீர்த்தனா பாண்டியன், ௧௭, வெண்கலப் பதக்கம் வென்றார்.இவர் படித்து வரும் ராபர்ட்சன்பேட்டை பகவான் மஹாவீர் ஜெயின் கல்லுாரியில், நேற்று அவருக்கு பாராட்டு விழா நடந்தது.இக்கல்லுாரியில் அவர் படிக்கும் வரை, இலவச கல்வி வழங்குவதாக நிர்வாகம் அறிவித்தது. அவர்கள் குடும்பத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.தமிழரான கீர்த்தனா, பெமல் தொழிற்சாலை பொறியாளர் பாண்டியன் - ஜெயலட்சுமி தம்பதி மகள் ஆவார். கீர்த்தனா பாண்டியன், தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X