பயங்கரவாதியின் உடலை பெற்ற பாகிஸ்தான்: மீண்டும் அம்பலமானது சதி திட்டம்

Added : செப் 06, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் மாரடைப்பால் இறந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இதன் வாயிலாக, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி தபராக் உசேன், கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்திய
Pakistan, Terrorist, Tabarak Hussain, பயங்கரவாதி, பாகிஸ்தான், தபராக் உசேன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் மாரடைப்பால் இறந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இதன் வாயிலாக, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி தபராக் உசேன், கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்திய ராணுவத்தின் முக்கிய நிலைகளை தகர்க்கும் திட்டத்துடன், தற்கொலை படை பயங்கரவாதியாக காஷ்மீருக்குள் ஊடுருவியதாக தெரிவித்தார்.

கைது செய்யப்படுவதற்கு முன் நடந்த சண்டையின் போது காயமடைந்ததால், தபராக் உசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாரடைப்பு காரணமாக சமீபத்தில் அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக்கொள்ள பாக்., அரசு சம்மதித்தது. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் பாக்., ராணுவத்திடம், தபராக் உசேனின் உடலை இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


latest tamil news



இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் பாக்., சதித் திட்டம் பல முறை அம்பலமாகி உள்ளது. ஆனால், அந்த பயங்கரவாதிகளுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாக்., மறுத்து வந்தது. தற்போது, தபராக் உசேனின் உடலை பெற்றதன் வாயிலாக, அவரை பாக்., தான், இந்தியாவுக்குள் அனுப்பி வைத்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது தான், இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த ஊடுருவிய பயங்கரவாதியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு பாக்., சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
06-செப்-202217:55:36 IST Report Abuse
DVRR இவர்கள் உளறலை கீழே பாருங்கள் : பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபாரக் உசேன் நீதிக்கு புறம்பான கொல்லப்பட்டது குறித்து இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
06-செப்-202217:43:42 IST Report Abuse
Somiah M இந்திய ராணுவம் பாகிஸ்தான் போராளியின் உடலை ஒப்படைத்தது என்று கூறுவதை மறுப்பவர்கள் அதற்கானகாரணங்களையோ அல்லது ஆதாரங்களையோ கூறவேண்டாமா ?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-செப்-202212:55:43 IST Report Abuse
Vena Suna பல வருடங்களாக இதே தான் பாகிஸ்தான் செய்கிறது. நம் அரசுக்களோ, ஒரு எதிர் நடவடிக்கையும் செய்ய காணோம். அவர்கள் நாட்டில் நாமும் இதே போல செய்தால் தான் உருப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X