பயங்கரவாதியின் உடலை பெற்ற பாகிஸ்தான்: மீண்டும் அம்பலமானது சதி திட்டம்| Dinamalar

பயங்கரவாதியின் உடலை பெற்ற பாகிஸ்தான்: மீண்டும் அம்பலமானது சதி திட்டம்

Added : செப் 06, 2022 | கருத்துகள் (13) | |
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் மாரடைப்பால் இறந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இதன் வாயிலாக, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி தபராக் உசேன், கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்திய
Pakistan, Terrorist, Tabarak Hussain, பயங்கரவாதி, பாகிஸ்தான், தபராக் உசேன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் மாரடைப்பால் இறந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இதன் வாயிலாக, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி தபராக் உசேன், கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்திய ராணுவத்தின் முக்கிய நிலைகளை தகர்க்கும் திட்டத்துடன், தற்கொலை படை பயங்கரவாதியாக காஷ்மீருக்குள் ஊடுருவியதாக தெரிவித்தார்.



கைது செய்யப்படுவதற்கு முன் நடந்த சண்டையின் போது காயமடைந்ததால், தபராக் உசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாரடைப்பு காரணமாக சமீபத்தில் அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக்கொள்ள பாக்., அரசு சம்மதித்தது. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் பாக்., ராணுவத்திடம், தபராக் உசேனின் உடலை இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


latest tamil news



இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கும் பாக்., சதித் திட்டம் பல முறை அம்பலமாகி உள்ளது. ஆனால், அந்த பயங்கரவாதிகளுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாக்., மறுத்து வந்தது. தற்போது, தபராக் உசேனின் உடலை பெற்றதன் வாயிலாக, அவரை பாக்., தான், இந்தியாவுக்குள் அனுப்பி வைத்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.



கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது தான், இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த ஊடுருவிய பயங்கரவாதியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு பாக்., சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X