'கிரஷர்' ஆலை அமைவதை தடுக்க மக்கள் மனு

Added : செப் 06, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம், : கடம்பர்கோவில் கிராமத்தில், விவசாய நிலத்தில், 'கிரஷர்' அமைவதை தடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.அப்போது, கடம்பர்கோவில் கிராமத்தில் 'கிரஷர்' அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,



காஞ்சிபுரம், : கடம்பர்கோவில் கிராமத்தில், விவசாய நிலத்தில், 'கிரஷர்' அமைவதை தடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.அப்போது, கடம்பர்கோவில் கிராமத்தில் 'கிரஷர்' அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமவாசிகள் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பர்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறோம். விவசாயத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளோம். இந்நிலையில், எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிரஷர் எனப்படும் கருங்கல் அரவை நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 'கிரஷர்' அருகில் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் மாசடைந்து, தகுதியற்ற நிலமாக மாறும். 'கிரஷர்' அமையவுள்ள இடம் அருகே, பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டி தரப்பட உள்ளது. இதனால், பழங்குடியின மக்களுக்கு உடல்நிலை பாதிப்படைவதோடு, பாதுகாப்பற்ற சூழல் உருவாகும். எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 'கிரஷர்' அமைவதை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X