நகராட்சிப் பள்ளியில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

Added : செப் 06, 2022 | |
Advertisement
திருவள்ளூர்-நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் சார்பில், தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. செயலர் ஸ்ரீதர், பொருளாளர் துக்காராம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்



திருவள்ளூர்-நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் சார்பில், தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. செயலர் ஸ்ரீதர், பொருளாளர் துக்காராம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் அருண் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் சார்பில் அமைக்கப்பட்ட, ஸ்மார்ட் வகுப்பறையினை, முதன்மை கல்வி அலுவலர் திறந்து வைந்து பார்வையிட்டார்.நகராட்சி பள்ளி மாணவர்கள், ஐ.ஐ.டி., தேர்வை எதிர்கொள்ளும் வகையில், 14 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X