மனை விற்பனை பத்திரத்துக்கு 22 ஆண்டாக காத்திருப்பு!

Added : செப் 06, 2022 | |
Advertisement
சென்னையில், உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், தவணை தொகை செலுத்தி முடித்தும், விற்பனைப் பத்திரத்துக்காக 22 ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், உலக வங்கி உதவியுடன்,



சென்னையில், உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், தவணை தொகை செலுத்தி முடித்தும், விற்பனைப் பத்திரத்துக்காக 22 ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், உலக வங்கி உதவியுடன், கடந்த 1977 முதல் 1988ம் ஆண்டு வரையிலான காலத்தில், சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டன.


732 இடங்கள்


சென்னையில், 258 இடங்கள் உட்பட தமிழகம் முழுதும், 732 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பெரும்பாலான திட்டங்கள், வேறு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.சென்னையில் மட்டும் இத்திட்டத்தில், 59 ஆயிரத்து 481 குடும்பங்களுக்கு, மனைகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், தவணைத் தொகையை முறையாக செலுத்தியும், விற்பனைப் பத்திரம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து, சென்னை தாம்பரம், கடப்பேரி மவுலானா நகர் திட்டப் பகுதியைச் சேர்ந்த ஆர்.மகாலிங்கம் கூறியதாவது: உலக வங்கி திட்டம் என்ற பெயரில் எங்களுக்கு, மவுலானா நகரில் 1995ம் ஆண்டு, 115 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், 40 ஒதுக்கீட்டாளர்கள் முழு தொகையை செலுத்தி விட்டோம்.இங்கு, 30 பேருக்கு இன்னும் முறையான ஒதுக்கீடு ஆணை கூட வழங்கப்படவில்லை. தவணை செலுத்தி முடித்தவர்களுக்கு, விற்பனைப் பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை.குடிசை மாற்று வாரியம் தற்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து முறையிட்டு வருகிறோம்.

இதற்காக, தலைமை அலுவலகத்துக்குச் சென்றால், கே.கே.நகர் அலுவலகத்துக்கு அனுப்பினர். அங்கு சென்றால், கண்ணகி நகர் அலுவலகத்துக்கு அனுப்புகின்றனர்.கண்ணகி நகர் அலுவலகத்துக்குச் சென்றால், அந்த அலுவலகத்தில் உள்ள நபர்கள் தனியாக அழைத்து, ஒரு மனைக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் 'கவனிப்பு' கேட்கின்றனர்.இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பித்தால், 'சம்பந்தப்பட்ட துறைக்கு, குடிசை மாற்று வாரியம் மாற்று இடம் கொடுத்தால் தான், இந்த இடம் வாரியத்தின் பெயருக்கு வரும். அப்போது தான், விற்பனைப் பத்திரம் கிடைக்கும்' என தெரிவிக்கப்படுகிறது.இதில் எதை நம்புவது என்ற குழப்பத்தில், 22 ஆண்டுகளாக தவித்து வருகிறோம்.மேலதிகாரிகள் நிலையில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும் பிரிவு அலுவலர், பணியாளர்கள் நிலையில் குளறுபடிகள் நடக்கின்றன. எங்களுக்கு விற்பனைப் பத்திரம் கிடைக்க, வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.குளறுபடி என்ன?




நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்பது, ஏற்கனவே மக்கள் குடியிருந்து வந்த இடங்கள் மனைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டன ★ இவற்றில் பெரும்பாலான இடங்களில் வருவாய் துறை, சென்னை மாநகராட்சி, மத்திய அரசு துறைகள், ரயில்வே, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றின் நிலங்கள் பயன்படுத்தப்பட்டன ★ இந்த நிலங்கள் முறையாக குடிசை மாற்று வாரிய பெயருக்கு மாற்றப்படாமல், முன்நுழைவு அனுமதி என்ற பெயரில் மனைகளாக ஒதுக்கப்பட்டுள்ளன ★ குடிசை மாற்று வாரியம் மனைகளாக ஒதுக்கிய நிலங்களுக்கு ஈடாக, மாற்று நிலங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்க வேண்டும் ★ இப்பிரச்னைக்கு பொதுவாக, ஒரே அரசாணை வாயிலாக நில உரிமை மாற்றம் செய்ய, 2012ல் எடுக்கப்பட்ட நடவடிக்கை அமலுக்கு வராமல் இருப்பதே அடிப்படை காரணமாக உள்ளது.- நகரமைப்பு

- நமது நிருபர் -வல்லுனர்கள்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X