வேளாண் அலுவலக வளாகத்தில் குப்பை எரிப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
திருத்தணி-வேளாண் விற்பனை மைய அலுவலக வளாகத்தில் பொது மக்கள் குப்பை கொட்டி எரிப்பதால் ஊழியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில், வேளாண் விற்பனை மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல், வேர்க்கடலை மற்றும் சிறுதானிய விதைகள் வாங்கிச் செல்கின்றனர்.இதுதவிர பயிர்களுக்கு உயிர் உரங்களும் மானிய விலையில்
வேளாண் அலுவலக வளாகத்தில் குப்பை எரிப்பு



திருத்தணி-வேளாண் விற்பனை மைய அலுவலக வளாகத்தில் பொது மக்கள் குப்பை கொட்டி எரிப்பதால் ஊழியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில், வேளாண் விற்பனை மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல், வேர்க்கடலை மற்றும் சிறுதானிய விதைகள் வாங்கிச் செல்கின்றனர்.இதுதவிர பயிர்களுக்கு உயிர் உரங்களும் மானிய விலையில் செய்யப்படுகிறது. இந்த விற்பனை மையத்திற்கு கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், வி.கே.என். கண்டிகை, சிறுகுமி, புச்சிநாயுடு கண்டிகை, டி.சி.கண்டிகை, தாடூர் மற்றும் செருக்கனுார் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து விவசாயிகள் வந்து வாங்கிச் செல்வர்.இந்நிலையில், வேளாண் விற்பனை மையத்தை சுற்றியும் அப்பகுதி மக்கள் குப்பையை கொட்டிவிட்டு செல்கின்றனர்.மேலும், ஊராட்சி நிர்வாகத்தில், துப்புரவு செய்யும் சில ஊழியர்களும், குப்பை கொட்டிவிட்டு எரிக்கின்றனர்.இதனால் புகைமூட்டம் மற்றும் துர்நாற்றத்தால் வேளாண் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, வேளாண் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X