கார் மோதி விபத்து போலீஸ் ஏட்டு பலி

Added : செப் 06, 2022 | |
Advertisement
திருவள்ளூர்-இருசக்கர வாகனத்தின் மீது, கார் மோதிய விபத்தில், தலைமை காவலர் பலியானார்.திருவள்ளூர் அடுத்த, பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புசெல்வன், 47. இவர், ஆவடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.கடந்த மாதம், 31ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அன்புசெல்வன் பணி முடித்து, 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்



திருவள்ளூர்-இருசக்கர வாகனத்தின் மீது, கார் மோதிய விபத்தில், தலைமை காவலர் பலியானார்.திருவள்ளூர் அடுத்த, பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புசெல்வன், 47. இவர், ஆவடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.கடந்த மாதம், 31ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அன்புசெல்வன் பணி முடித்து, 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது, பின்னால் வந்த 'இன்னாவோ' கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், தலைமை காவலர் அன்புசெல்வன் பலத்த காயம் அடைந்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம், அன்புசெல்வன் இறந்தார். திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுனர் ரோகித் அஷ்வா, 19, என்பவரை, கைது செய்து, விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X