கடலுார் - விருத்தாசலம் ரயில் பாதையில்125 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
கடலுார்-கடலுார் - விருத்தாசலம் ரயில் பாதையில் வேகத்தை அதிகரிக்க, 125 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கடலுார்- விருத்தாசலம் இடையிலான 58 கி.மீ., தொலைவிற்கு மின்பாதை அமைக்கும் பணி 2019ம் ஆண்டு துவங்கி, 2021 ஏப்ரலில் முடிந்தது. இந்த மார்க்கத்தில், அதிவேக ரயில் இன்ஜின் மூலம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் 2021 ஏப்ரல் 4
கடலுார் - விருத்தாசலம் ரயில் பாதையில்125 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம்



கடலுார்-கடலுார் - விருத்தாசலம் ரயில் பாதையில் வேகத்தை அதிகரிக்க, 125 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கடலுார்- விருத்தாசலம் இடையிலான 58 கி.மீ., தொலைவிற்கு மின்பாதை அமைக்கும் பணி 2019ம் ஆண்டு துவங்கி, 2021 ஏப்ரலில் முடிந்தது. இந்த மார்க்கத்தில், அதிவேக ரயில் இன்ஜின் மூலம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் 2021 ஏப்ரல் 4 ம் தேதி நடத்தப்பட்டது.அதைடுத்து, கடலுார்-திருச்சி, திருச்சி-கடலுார், காரைக்கால்-பெங்களூரு, பெங்களூர்-காரைக்கால் ஆகிய 4 ரயில்கள் 80 கி.மீ., வரை அதிகபட்ச வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பாதையில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, ரயில்வே பாதையில் சிலீப்பர் கட்டைகளை மாற்றி அமைத்து, ஜல்லிகள் பேக்கிங் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பணிகள் முடிந்து, கடலுார் - விருத்தாசலம் ரயில் பாதையில் நேற்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து இன்ஜின் மற்றும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்ட சோதனை ரயில், கடலுார் துறைமுக ஜங்ஷனில் இருந்து காலை 12:05க்கு புறப்பட்டு, வடலுார், நெய்வேலி வழியாக 125 கி.மீ., வேகத்தில், பகல் 12:40 மணிக்கு விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனை சென்றடைந்தது. 58 கி.மீட்டர் துாரத்தை 35 நிமிடங்களில் ரயில் கடந்துள்ளது. ரயில் தொழில் நுட்ப அதிகாரிகள் ரயில் இன்ஜினில் இருந்தபடி, சோதனை ஓட்டத்தை நடத்தி கண்காணித்தனர். இதன் மூலம் கடலுார்-விருத்தாசலம் வரை உள்ள ரயில் பாதையில் மணிக்கு 125 கி.மீ., வரை ரயில்கள் வேகமாக செல்ல முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X