திருட்டு பணம் பிரிப்பதில் தகராறு கத்தியால் குத்தி வாலிபர் கொலை

Added : செப் 06, 2022 | |
Advertisement
விருத்தாசலம்-இரும்பு திருடி விற்ற பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், மந்தாரகுப்பம் அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ மகன் ஆகாஷ், 22. அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் ஆகாஷ், 24. இருவரும் நண்பர்கள். இருவரும் சில தினங்களுக்கு முன் என்.எல்.சி., சுரங்கத்தில் இரும்பு
திருட்டு பணம் பிரிப்பதில் தகராறு கத்தியால் குத்தி வாலிபர் கொலை



விருத்தாசலம்-இரும்பு திருடி விற்ற பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், மந்தாரகுப்பம் அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ மகன் ஆகாஷ், 22. அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் ஆகாஷ், 24. இருவரும் நண்பர்கள். இருவரும் சில தினங்களுக்கு முன் என்.எல்.சி., சுரங்கத்தில் இரும்பு திருடி, விற்பனை செய்துள்ளனர்.நேற்று பகல் 3:00 மணியளவில், இருவரும் வயலில் மது அருந்தி உள்ளனர். அப்போது, பணம் பிரிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. பின் சமாதானமாகி வீட்டிற்கு சென்றனர்.அதன் பிறகு மீண்டும் பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு அத்திரமடைந்த பிரகாஷ் மகன் ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜூ மகன் ஆகாஷை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்தார். ஊ.மங்கலம் போலீசார், பிரகாஷ் மகன் ஆகாஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X