திருப்போரூர் சாலை பள்ளம் தற்காலிகமாக சீரமைப்பு

Added : செப் 06, 2022 | |
Advertisement
திருப்போரூர், : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருப்போரூர் சாலையில் ஏற்பட்ட பள்ளம், தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டன.இதன் காரணமாக, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு சாலையின் பல இடங்களில் ஆங்காங்கே குண்டும்,
திருப்போரூர் சாலை பள்ளம்  தற்காலிகமாக சீரமைப்பு



திருப்போரூர், : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருப்போரூர் சாலையில் ஏற்பட்ட பள்ளம், தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டன.இதன் காரணமாக, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு சாலையின் பல இடங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. சாலை முழுதும் துாசி மண்டலமாக மாறியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினர், பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்த சாலைகளில் புதிய சாலை அமைத்தனர்.இதில், ஓ.எம்.ஆர்., சாலை, இள்ளலுார் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சாலையில், தொடர் வாகன போக்குவரத்து காரணமாக பல இடங்களில் மேடு, பள்ளம் ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக பள்ளங்களில் மண் நிரப்பி, தற்காலிகமாக சீரமைத்துள்ளது.தரமான சாலை அமைத்து, மீண்டும் பள்ளம் ஏற்படாமல் நிரந்தர தீர்வு காணவேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X