பாலாற்றில் மீதமுள்ள 4 இடங்களில் தடுப்பணை வருமா?

Added : செப் 06, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : பாலாற்றில் மூன்று இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு இடங்களில் தி.மு.க., அரசு தடுப்பணை கட்டுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றில், தடுப்பணை கட்டக்கோரி, பல ஆண்டுகளாக விசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஒவ்வொரு பருவமழைக்கும் பாலாற்று நீர் வீணாக கடலில்
பாலாற்றில் மீதமுள்ள 4 இடங்களில் தடுப்பணை வருமா?



காஞ்சிபுரம் : பாலாற்றில் மூன்று இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு இடங்களில் தி.மு.க., அரசு தடுப்பணை கட்டுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றில், தடுப்பணை கட்டக்கோரி, பல ஆண்டுகளாக விசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஒவ்வொரு பருவமழைக்கும் பாலாற்று நீர் வீணாக கடலில் கலந்ததே தவிர, ஏரிகளை நிரப்பவோ அல்லது

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த எந்த தடுப்பணையும் கடந்த காலங்களில் கட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாலாற்றில் ஏழு தடுப்பணை கட்டப்படும் என, 2017 ல் அறிவித்தார். அதன்படி ஈசூர்-வள்ளிபுரம் இடையேயும், வாயலுாரிலும், உள்ளாவூரிலும் அடுத்தடுத்து நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெய்த பருவமழையில், இந்த தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. அதேசமயம், மேலும் கட்ட வேண்டிய நான்கு தடுப்பணைகள் பற்றி பொதுப்பணித்துறையின் கருத்துருக்கள் நீர்வளத் துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளான நிலையில், வெங்குடி, உதயம்பாக்கம், வெங்கடாவரம், பாலுார் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய தடுப்பணைகளுக்கு எந்த நிதி ஒதுக்கீடுக்கான அரசாணையும்

இதுவரை பிறப்பிக்க வில்லை.நிலத்தடி நீரை உயர்த்தவும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கவும், வெங்கடாவரத்தில் முன்னுரிமை கொடுத்து தடுப்பணை கட்ட வேண்டும் என காஞ்சிபுரம் நகர மக்களிடமும் கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் நேரு கூறியதாவது:ஏற்கனவே அறிவித்த இடங்களில் நிதி பெற்று தடுப்பணை கட்ட வேண்டும். ஏரி குளம் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி சரி செய்ய வேண்டும். தடுப்பணை கட்ட வேண்டும் என, எங்களது சங்கத்தின் மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வருக்கும், கலெக்டருக்கும் அனுப்பியுள்ளோம். விவசாயிகள் நலன் கருதி, மீதமுள்ள நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X