மதுரையில் 538 புதுமைப்பெண்கள்

Added : செப் 06, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை மீனாட்சி அரசு கல்லுாரியில் நடந்த விழாவில் மதுரையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 538 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்குப் புத்தகத்தை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். மூவலூர் ராமாமிர்தம் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகள் 538 பேர்



மதுரை : மதுரை மீனாட்சி அரசு கல்லுாரியில் நடந்த விழாவில் மதுரையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 538 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்குப் புத்தகத்தை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். மூவலூர் ராமாமிர்தம் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகள் 538 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அனைவருக்கும் திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், மீனாட்சி கல்லூரி முதல்வர் வானதி, மாநகராட்சி மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, மாவட்ட சமூக நல அலுவலர் நளினா ராணி பங்கேற்றனர்.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் penkalvi.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X