நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
மாணவரின் பெற்றோர் கண்ணீர் பேட்டிகாரைக்கால்- -'குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து, எங்கள் மகனை கொலை செய்த பெண்ணை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என, பெற்றோர் கூறினர்.புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், குளிர்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் பெற்றோர் ராஜேந்திரன்,


மாணவரின் பெற்றோர் கண்ணீர் பேட்டி


காரைக்கால்- -'குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து, எங்கள் மகனை கொலை செய்த பெண்ணை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என, பெற்றோர் கூறினர்.புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், குளிர்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் பெற்றோர் ராஜேந்திரன், மாலதி ஆகியோர் நேற்று கண்ணீர் மல்க கூறியதாவது:எங்கள் மகன் பாலமணிகண்டன் மயங்கிய நிலையில், உடனே அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் காண்பித்தோம். மருத்துவர்கள் வாந்தி நிற்பதற்கு மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினர்.பள்ளி நிர்வாகம் மாணவனின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல், விழா ஏற்பாட்டில் குறியாக இருந்தனர்.மகன் உடல்நிலை மிகவும் மோசமானதால் மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.காலாவதியான குளிர்பானம் குடித்ததால் தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி, குளுக்கோஸ் மட்டும் ஏற்றினர். சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினர்.பின்னர்,சிறுவன் என்ன விஷம் உட்கொண்டான் என விசாரித்து காவல்துறை தரப்பில் சொன்னால்தான் அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றனர்.போலீசார் விசாரணை யில் மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக கூறியுள் ளார்.இப்படி காவல் துறையும் மருத்துவர்களும் ஒருவர் மேல் ஒருவர் குறை கூறி காலம் கடத்தியதால் மகனை இழந்து விட்டோம். எங்கள் மகனுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.அரசு மருத்துவமனை டாக்டர்கள் தங்களது கிளினிக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து, எங்கள் மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க தவறியதால் தான் உயிரிழந்து விட்டார். அரசு மருத்துவமனை டாக்டர்கள் கிளினிக்குகளில் பணிபுரிவதை புதுச்சேரி அரசு தடுக்க வேண்டும்.விஷம் கொடுத்து கொலை செய்த விக்டோரியா சகாயராணியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.பால மணிகண்டன் மரணத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சுகாதாரத் துறை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X