'மாஜி' டி.ஜி.பி., மீதான வழக்கில் மாயமான ஆவண நகல் தாக்கல்

Added : செப் 06, 2022 | |
Advertisement
விழுப்புரம்-முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீது விழுப்புரம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு



விழுப்புரம்-முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீது விழுப்புரம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.நேற்றைய விசாரணையில், மாஜி சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட மாஜி எஸ்.பி., ஆஜராகவில்லை. சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் பேசிய தொலைபேசி உரையாடல், 'வாட்ஸ் ஆப்' தகவல்கள், மொபைல் போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் காணாமல் போனது.அவற்றின் நகல்களை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு விழுப்புரம் கோர்ட், கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டது.அதன்பேரில், நேற்றைய விசாரணையின் போது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆஜராகி, வழக்கில் மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.தொடர்ந்து, அரசு தரப்பு சாட்சிகளான ஜெய்சங்கர், ராமநாதன், ராஜேந்திரன், சரவணன் ஆகிய 4 பேர் ஆஜராகி சாட்சி அளித்தனர். சாட்சியங்களை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X