அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தொடர்மழையால் சேதம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
பெரியகுளம் : தாமரைக்குளம் புரவு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர் தொடர் மழையால் சேதமடைந்துள்ளது. பெரியகுளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாமரைக்குளம் கண்மாய் கரைக்கு கீழ் பகுதியில் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் மழை நீர் அதிகளவு தேங்கி நெல் மகசூல்
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தொடர்மழையால் சேதம்


பெரியகுளம் : தாமரைக்குளம் புரவு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர் தொடர் மழையால் சேதமடைந்துள்ளது. பெரியகுளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாமரைக்குளம் கண்மாய் கரைக்கு கீழ் பகுதியில் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் மழை நீர் அதிகளவு தேங்கி நெல் மகசூல் பாதித்துள்ளது.

இதனால் அறுவடை இயந்திரங்கள் வயலில் சென்று அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. ஒரு சில விவசாயிகள் ஆட்கள் மூலம் அறுவடை செய்து களத்தில் குவித்துள்ளனர். மழை, ஈரபதமான சூழலால் நெல் முளைத்து வருகிறது. மகசூலை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். பெண் விவசாயி அறிவு: உழவு,விதை நெல், நடவு, உரச் செலவு உட்பட ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் செலவாகியது.தற்போது அறுவடைக்கு தயாரான நெற்பயிர் பருவம் தவறிய மழையால் வயலில் தேங்கி நெல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உழைப்பு வீணாகி, ரூ.40,000 வரை நஷ்டம் ஏற்படும். பாதிப்பை கணக்கிட்டு விவசாயிகளுக்கு துரிதமாக நிவாரணம் வழங்கவேண்டும் என்றார். கோபாலகிருஷ்ணன் விவசாயி: தாமரைக்குளம் புரவில் 50 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த கரும்பு பயில்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் கரும்பு விளைச்சல் பாதித்து, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X