வ.உ.சி., பிறந்த நாள்; கவர்னர் மரியாதை

Added : செப் 06, 2022 | |
Advertisement
புதுச்சேரி-அரசு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.சட்டசபை எதிரே உள்ள வ.உ.சி., சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அன்னை தெரசா நினைவு நாளையொட்டி, பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
வ.உ.சி., பிறந்த நாள்; கவர்னர் மரியாதை



புதுச்சேரி-அரசு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.சட்டசபை எதிரே உள்ள வ.உ.சி., சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அன்னை தெரசா நினைவு நாளையொட்டி, பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அசோக்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பா.ஜ.,வினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையிலும், காங்., சார்பில் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், அ.தி.மு.க.,வினர் செயலாளர் அன்பழகன் தலைமையிலும் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்தனர்.புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் உட்பட பல்வேறு கட்சியினர், பல அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.� அ.தி.மு.க.,வினர் செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X